சுவிற்சர்லாந்து லுட்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தேர் - தீர்த்தத் திருவிழா

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிற்சர்லாந்து, லுட்சேர்ன் மாநிலத்தின் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலய தேர் - தீர்த்தத் திருவிழா கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த திருவிழாவில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்ததுடன், தாயக பாணியில் தேர் மற்றும் தீர்த்த உற்சவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்த திருவிழாவினை முன்னிட்டு சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்ததுடன், அவர்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

தாயகத்தின் கனவுகளுடன் புலம்பெயர் மண்ணில் வாழ்ந்து வரும் மக்கள் தமது முயற்சிகளால் ஆன்மீக அமைதி தேடி பல தடைகள் சவால்களை எதிர்கொண்டு ஆலயங்கள் அமைத்து வழிபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்