அதிகாலையில் தண்டவாளத்தை கடந்த நபர்: ரயில் மோதி பலியான பரிதாபம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகாலை நேரத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நபர் ஒருவர் ரயில் மோதி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Arbon ரயில் நிலையத்தில் தான் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை 4 மணி நேரத்தில் 55 வயதுள்ள நபர் ஒருவர் ரயில் நிலையத்திற்கு அருகில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதே நேரத்தில் Romanshorn நகரை நோக்கி சரக்கு ரயில் ஒன்று அதிவேகத்தில் சென்றுள்ளது.

எனினும், சரக்கு ரயில் வருவது தெரியாமல் நபர் தண்டவாளத்தை கடந்துள்ளதாக தெரிகிறது.

அப்போது, நபர் மீது பயங்கரமாக மோதிய ரயில் அவரது தலையை சிதைத்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சில வினாடிகளில் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த பொலிசார் நபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

தடவியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டதும், அவர்கள் தண்டவாளத்தில் ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.

இதுக் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறை கொண்டாங்களை முடித்துவிட்டு திரும்பும்போது இவ்விபத்து நிகழ்ந்துள்ளதா? அல்லது வேறு பின்னணி காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்