கார் பந்தயத்தில் நிகழ்ந்த விபரீதம்: மரத்தில் மோதி பலியான வீரர்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com
advertisement

சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த கார் பந்தியத்தில் வீரர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மரம் மீது மோதி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Schaffhausen மாகாணத்தில் உள்ள Oberhallau நகருக்கு அருகில் நேற்று Swiss Automobile Mountain Championship கார் பந்தியம் நடைபெற்றுள்ளது.

advertisement

இப்பந்தியத்தில் அனுமதிக்கப்பட்ட மைதானத்தை 5 முறை சுற்றி வரும்போது முதலில் வரும் போட்டியாளர் வெற்றி பெற்றவராவர்.

கோலாகலமாக தொடங்கிய இப்போட்டியை காண 10,000 பேர் திரண்டுள்ளனர்.

இந்நிலையில், விளையாட்டு போட்டி தொடங்கியதும் கார்கள் அனைத்தும் சீறிப்பாய்ந்துள்ளன.

ஆனால், மூன்றாவது சுற்று வந்தபோது அந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது, கார்களை முந்திச் சென்றபோது ஒரு கார் சாலையை விட்டு விலகி அந்தரத்தில் பறந்துள்ளது.

அப்போது, எதிரே இருந்த மரம் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரை ஓட்டிய பேர்ன் மாகாணத்தை சேர்ந்த Martin Wittwer(33) என்ற வீரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்