தாழ்வாக பறந்த விமானம்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் Genthod பகுதியில் தாழ்வாக பறந்த விமானத்தால் குடியிருப்பின் கூரை சேதமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெனீவா விமான நிலையத்தின் அருகே அமைந்துள்ள குடியிருப்பின் கூரை, தாழ்வாக பறந்த விமானத்தால் சேதமடைந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று உள்ளூர் நேரப்படி மாலை 7.30 மணியளவில் குறித்த குடியிருப்பில் குடும்பத்தினர் அனைவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென்று பெரும்புயல் வீசுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. பூங்காவில் இருந்த மரங்கள் அனைத்தும் கடுமையாக ஆட்டம் கண்டுள்ளது.

திடீரென்று குடியிருப்பின் கூரை பெயர்ந்து சிதறியது போன்ற பெரும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த குடும்ப உறுப்பினர்கள் குடியிருப்பின் வெளியே விரைந்து வந்து பார்த்துள்ளனர்.

அதில் வீட்டின் கூரையில் பதித்திருந்த ஓடுகள் உடைந்து நொறுங்கியுள்ளதை கண்டறிந்தனர்.

இதுகுறித்து அந்த குடியிருப்பின் உரிமையாளர் தெரிவிக்கையில், விமான நிலையத்தின் அருகாமையில் குடியிருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் தங்களுக்கு புதிதல்ல எனவும், ஆனால் தற்போது தாழ்வாக பறந்த போயிங் விமானத்தால் தங்களது குடியிருப்பின் கூரை பெயர்ந்து நொறுங்கியுள்ளது என்றார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக குடியிருப்பில் இருந்த எவருக்கும் காயம் எதுவும் இதனால் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்