சுவிஸ் ரயில்கள் ரத்து குறித்து வெளியான அறிவிப்பு

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய பாதையில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளதாக சுவிஸ் மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சுவிஸ் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெனிவாவில் உள்ள Cornavin ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையத்தை இணைக்கும் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

இதனால் வரும் 7ஆம் திகதி காலை நான்கு மணி முதல் 8ஆம் திகதி காலை 9 மணி வரை குறித்த ரயில் பாதையில் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளது.

ரயிலுக்கு பதிலாக பயணிகள் பேருந்தை பயன்படுத்தும் படியும், Nyon பகுதியிலிருந்து விமான நிலையத்தை அடையும் பேருந்து 15 நிமிடத்துக்கு ஒன்று வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல ஜெனிவா- Lausanne நகரின் இடையே செல்லும் ரயில்களும், 8ஆம் திகதி ஞாயிறு இரவு 11 மணி முதல் வியாழக்கிழமை வரை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதையை பயன்படுத்தும் மக்கள் பேருந்தை பயன்படுத்தலாம் எனவும், இதன் காரணமாக 20 நிமிடங்கள் பயண நேரமானது அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்