மருத்துவர்களிடம் செல்ல தயங்கும் சுவிஸ் மக்கள்: காரணம் இதுதான்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

20 சதவீதத்துக்கும் அதிகமான சுவிஸ்வாசிகள் மருத்துவ செலவு அதிகமாக இருப்பதன் காரணமாக கடந்த ஆண்டு மருத்துவ சிகிச்சை பெற மருத்துவர்களை சந்திக்காமல் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Organisation for Economic Co-operation and Development (OECD) இது சம்மந்தமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

எண்ணிக்கையின் படி பார்த்தால் ஐந்தில் ஒருவர் கடந்த ஆண்டு மருத்துவ செலவு அதிகமாக இருந்ததால் மருத்துவரை தவிர்த்துள்ளார்கள்.

அதே போல 11.6 சதவீத சுவிஸ் மக்கள் அதிக விலை காரணமாக கடந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வாங்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

சுவிஸ் சுகாதார அமைப்பு உலகின் மிகச்சிறந்த பராமரிப்புக்காக அறியப்படுகிறது என்றாலும், உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த சுகாதாரம் கொண்டதாகவும் திகழ்கிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 11 சதவீதத்தை சுகாதாரப் பராமரிப்புக்காக சுவிஸ் செலவிடுகிறது.

கட்டாய உடல்நல காப்பீட்டு விடயத்தில் மட்டும் சுவிஸ் கடந்த ஆண்டு $32 பில்லியன் செலவு செய்துள்ளது.

OECD-ன் அறிக்கையின் படி, ஒட்டுமொத்த சுகாதார செலவின விடயத்தில் அமெரிக்காவின் தனி நபர் $9,892 செலவிடுகிறார், சுவிஸ் தனி நபர் இதற்காக $7,919 செலவிடுவதும் தெரியவந்துள்ளது.

வாழ்நாள் கால அளவு சுவிஸ் ஆண்களுக்கு 80.5 வயதாகவும், சுவிஸ் பெண்களுக்கு 85.1 வயதாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்