திருமண வரவேற்பில் உயிரிழந்த சுவிஸ் மணமகன்

Report Print Deepthi Deepthi in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் திருமண வரவேற்பின் போது உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்த விக்ரம்ஜீத் சிங் என்பவர் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.

இவருக்கு தனது சொந்த ஊரான அரியானாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அதன்படி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மணமகனை சுற்றி வந்து உறவினர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்காக வானவேடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ஒவ்வொரு நடன சுற்று முடியும் போதும் மணமகனின் உறவினர் ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு முறை வானத்தை நோக்கி சுட்டபோது திடீரென்று அவர் மீது ஒருவர் மோதினார். எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு குறி தவறி மணமகன் மீது பாய்ந்தது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமைனயில் கொண்டு சென்றனர். ஆனால் அவர் பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்