சுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட பேய் மழை: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் பெய்த பேய் மழையால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திங்களன்று மாலை பெய்த இந்த பெருமழையால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் நகரின் முக்கிய பகுதிகளில் ரயில் சேவையும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மட்டுமின்றி நகரின் பெரும்பாலான தெருக்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என அனைத்தும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

சில பகுதிகளில் தெரு முழுவதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. city centre-ல் முட்டளவு தண்ணீர் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் அவசர உதவி கேட்டு பொலிசாருக்கு தொடர்ந்து அழைப்பு வந்துள்ளதாகவும், ஆனால் பொதுமக்களில் எவருக்கேனும் காயம் ஏற்பட்டுள்ளதாக எந்த தகவலும் வெளியாகவில்லை என பொலிஸ் தரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நகரின் 3 முக்கிய ரயில் சேவை முடங்கியுள்ளதாகவும், இதனால் ரயில் பயணிகளை பேருந்தில் அனுப்பி வைத்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். திங்கள் இரவு மட்டும் லாசன்னே நகரில் மணிக்கு 14.5 மி.மீற்றர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி குறித்த பகுதிகளில் 3-ஆம் எண் காலநிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்