2017ல் எனது சிறந்த தருணங்கள்: செரீனா வில்லியம்ஸ் நெகிழ்ச்சி

Report Print Kabilan in ரெனிஸ்
0Shares
0Shares
lankasri.com

அமெரிக்கவின் பிரபல டென்னிஸ் வீராங்கணை செரீனா வில்லியம்ஸ் 2017ஆம் ஆண்டில் தனது சிறந்த 10 தருணங்களை வெளியிட்டுள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தான் தாய்மை அடைந்தது முதல், உலக அளவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது வரை இந்த ஆண்டில் தனது வாழ்வில் நடந்த சிறந்த 10 தருணங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்துகொண்ட தருணம். இது சாதாரணமாக இருந்தாலும், மனதளவில் எதையோ இழந்துகொண்டிருக்கிறேன். ஏனென்றால், அப்போது ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாட வேண்டியிருந்தது.

2. இரண்டு மாத கருவை வயிற்றில் சுமந்தவாறு, மெல்போர்னில் அவுஸ்திரேலிய டென்னிஸ் ஓபனில் விளையாடினேன்.

3. Wow! அந்தப் போட்டியில் நான் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது, நான் இரண்டு மாத கருவை சுமப்பது, என் காதலன் அலெக்சிஸ் ஒஹனியன் மற்றும் சகோதரி வீனஸை தவிர யாருக்கும் அப்போது தெரியாது.

4. என் திருமணத்தின்போது அனைவரும் எனக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்தது, என்னை ஒரு தேவதை போல உணரச் செய்தது.

5. நான் 5 மாத கர்ப்பிணியாக இருந்தபோது...

6. என் திருமண உடை வடிவமைக்கப்பட்டபோது...

7. 7.5 வாரங்கள் பற்றி நினைத்துக்கொண்டிருந்த தருணம்...

8. ‘வானிட்டி ஃபார்’ என்ற சர்வதேச பத்திரிகைக்கு நான் அளித்த Pose.

9. எனக்கு Delivery Time நெருங்கியபோது...

10. என் அழகான குழந்தை பிறப்பதற்கு ஒருநாள் முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தருணம்...

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்