வாலிபர் மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி பற்றி தகவல் அளித்தால் 10,000 பவுண்ட் பரிசு

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டில் வாலிபர் மீது ஆசிட் வீசிய மர்ம நபர் குறித்து தகவல் அளித்தால் 10,000 பவுண்ட் பரிசு வழங்க உள்ளதாக பாதிக்கப்பட்ட வாலிபர் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள Luton நகரில் பெயர் வெளியிடப்படாத வாலிபர் ஒருவர் ஆடைகள் விற்பனை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு மே கடைக்கு வெளியே காரில் அமர்ந்திருந்தபோது நபர் ஒருவர் அருகில் வந்து பேச்சு கொடுத்துள்ளார்.

‘ஜீன்ஸ் பேண்ட் எடுக்க வேண்டும். கடையை திறக்க முடியுமா?’ எனக் கேட்டுள்ளார்.

இதற்கு உரிமையாளர் பதில் சொல்வதற்கு முன்னதாக கையில் வைத்திருந்த திரவத்தை அந்நபர் உரிமையாளரின் முகத்தில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

முதலில் குளிர்ச்சியாகவும், பின்னர் தீயிட்டு எரிப்பதும் போலவும் இருந்ததால் உரிமையாளர் வலியால் அலறியுள்ளார்.

இச்சம்பவத்தில் அவருடைய முகம் சிதைந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக வாலிபர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

ஆனால், இதுவரை தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், தன் மீது ஆசிட் வீசிய நபர் குறித்து தகவல் அளிக்கும் நபருக்கு 10,000 பவுண்ட் பரிசு அளிக்க உள்ளதாக பாதிக்கப்பட்ட வாலிபர் நேற்று அறிவித்துள்ளார்.

இதன் மூலம், குற்றவாளி கைது செய்யப்படுவதுடன் பிறர் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க முடியும் என வாலிபர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments