சர்ச்சையில் பிரித்தானியாவின் நீல வண்ண கடவுச்சீட்டு

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக முடிவு எடுத்ததை அடுத்து பழைய நீல வண்ண கடவுச்சீட்டு மீண்டும் புழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுத்தப்பட்ட குறித்த கடவுச்சீட்டு மீண்டும் புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில் அதன் தயாரிப்பு குறித்து தற்போது புது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

பிரித்தானியாவின் பாரம்பரியம் மிக்க நீல வண்ண கடவுச்சீட்டானது ஐரோப்பிய நிறுவனம் ஒன்றில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

490 மில்லியன் பவுண்டு மதிப்பிலான இந்த கடவுச்சீட்டு தயாரிக்கும் ஒப்பந்தமானது இரண்டு நிறுவனங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டிருந்தது.

அந்த இரு நிறுவனங்களும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளில் செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி ஆண்டுக்கு 6 மில்லியன் கடவுச்சீட்டுகள் தயாரித்து வெளியிடவும் முடிவாகியுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கன்சர்வேடிவ் எம்.பி. ஆண்ட்ரூ பிரிட்ஜென், பிரித்தானியாவுக்கான கடவுச்சீட்டு ஐரோப்பாவில் தயாரிக்கப்படுவது நகைப்புக்குரியது என்றார்.

மட்டுமின்றி கடவுச்சீட்டு தொடர்பில் ஒப்பந்தம் கோரிய நிறுவனங்களின் பட்டியலில் ஐரோப்பிய நிறுவனங்களின் பெயர்கள் இருப்பதை அவர் கடுமையாக விமர்சித்ததுடன், அதற்கு எதிராக புகாரும் அளித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியெறிய பின்னர், இதுபோன்ற முக்கியமான விவகாரங்களை நமது நாட்டிலேயே தயாரிக்க வேண்டும், அதுவே சரியான முடிவாக இருக்க முடியும் என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்