சிரியா மீது தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை: தெரேசா மே

Report Print Balamanuvelan in பிரித்தானியா
357Shares
357Shares
lankasrimarket.com

நேற்றிரவு சிரியா மீதான கூட்டுத் தாக்குதலை அமெரிக்க அதிபர் அறிவித்ததை தொடர்ந்து, தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்று பிரித்தானிய பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், மனித சமுதாயத்திற்கு மேற்கொண்டு ஏற்படவுள்ள இக்கட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சரியான மற்றும் சட்டப்பூர்வமான தாக்குதல்கள் வெற்றியடைந்துள்ளதாக தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்த அராஜகங்களுக்கெல்லாம் யார் காரணம் என்பது தெளிவாகப் புரிவதாகக் கூறிய அவர் தாக்குதல்கள் ஏன் நிகழ்த்தப்பட்டன என்பதற்கான காரணத்தை விளக்கினார்.

நேற்று முன்தினம் சிரியா தனது சொந்த நாட்டு மக்கள் மீதே ரசாயனத் தாக்குதல்கள் நடத்தியதற்கு, பதில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அவசர கேபினட் கூட்டம் ஒன்றை தெரசா மே கூட்டினார்.

இதைத் தொடர்ந்தே சிரியா மீது கூட்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன, இதற்கிடையில் மேற்கு நாடுகளின் வான் வழித்தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்த சிரிய அதிபர் பஷார் அல் அசாத் அவை சர்வதேச அமைதியைக் குலைக்கும் அபாயத்தை உண்டுபண்ணும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்