International
Notification
Notification
Submit Cancel

வடகொரியாவில் சித்ரவதைக்கு உள்ளான இளைஞர் உயிரிழப்பு

advertisement

வடகொரியாவின் சித்ரவதை கூடாரத்தில் இருந்து கோமா நிலையில் விடுவிக்கப்பட்ட அமெரிக்க இளைஞர் மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த தகவலை அவரது உறவினர்களே அறிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு வடகொரியா சென்றிருந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் என்ற இளைஞர் அந்நாட்டின் பிரசார பதாகையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு, ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து ராணுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து நடைபெற்ற விசாரணையில் வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரான குற்றம் எனக்கூறி ஒட்டோவுக்கு 15 ஆண்டுகள் கடினமான வேலைகளை செய்யும் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.

தண்டனை தீர்ப்பினை அடுத்து சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் ஒட்டோ வார்ம்பியர் சில நாட்களிலையே சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 17 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவித்த ஒட்டோவை வடகொரியா கடந்த வாரம் விடுதலை செய்திருந்தது.

இதனிடையே தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஒட்டோ, மூளைச்சாவு காரணமாக உயிரிழந்துள்ளதாக அவர் குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா ஒட்டோவை விடுதலை செய்யும்போதே கடுமையான வகையில் அவரது மூளை பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் மூளையில் பாதிப்புக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்களால் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
Send Feedback
Arbin
Journalist
advertisement
advertisement