அமெரிக்க பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு: மாணவர் பலி... பலர் படுகாயம்

Report Print Santhan in அமெரிக்கா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

அமெரிக்காவில் உள்ள பள்ளியில் மர்ம் நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் Washington-ல் உள்ள Rockford பகுதியில் இருக்கும் Freeman உயர்நிலைப் பள்ளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.

advertisement

இதில் மாணவன் ஒருவன் பலியாகியிருப்பதாகவும், மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் கூறுகையில், திடீரென்று பள்ளிக்குள் வந்த நபர் பள்ளியில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியை வைத்து சுட்டதாகவும், இதில் அவரது துப்பாக்கியில் இருந்து நான்கு குண்டுகள் வெளிவந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் அங்கிருக்கும் மாணவர்களை உடனடியாக வெளியேற்றி, பெற்றோர்களுடன் அனுப்பி வைத்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்