50-க்கும் மேற்ப்பட்டோரை பலாத்காரம் செய்த இளைஞர்: தாயிடம் கூறிய உண்மை

Report Print Raju Raju in அமெரிக்கா
947Shares
947Shares
lankasrimarket.com

இரண்டு சிறுவர்களை பலாத்காரம் செய்தததாக தாயிடம் இளைஞர் கூறிய நிலையில் 50-க்கும் மேற்பட்ட சிறார்களிடம் இப்படி நடந்துகொண்டுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ரிவர்சைட் நகரை சேர்ந்தவர் ஜோசப் ஹைடன் பாஸ்டன் (18).

இவர் சில தினங்களுக்கு முன்னர் 8 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதை கேட்டு தாய் அதிர்ச்சியடைந்த நிலையில் அவருடனே காவல் நிலையத்துக்கு வந்து ஜோசப் சரணடந்துள்ளார்.

அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் தனது 10 வயதிலிருந்து 50-க்கும் மேற்ப்பட்ட சிறார்களை தான் பாலியல் பலாத்காரம் செய்ததை ஜோசப் ஒப்பு கொண்டார்.

இதையடுத்து அவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வரும் புதன்கிழமை ஜோசப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார். அவருக்காக வழக்கறிஞர் வாதாடுவாரா என்ற விபரம் தெரியவில்லை.

ஜோசப்பால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களிடமும் பொலிசார் விசாரித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மற்றவர்கள் யாரும் புகார் கொடுக்க இன்னும் முன்வரவில்லை என பொலிசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்