90 கிலோவிலிருந்து அழகு தேவதை: பிரபல நடிகையின் ஸ்லிம் சீக்ரெட்

Report Print Raju Raju in பெண்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

நடிகர் ரஜினிகாந்துடன் லிங்கா திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சோனாக்‌ஷி சின்கா.

இயற்கையிலேயே மிகவும் குண்டு பெண்ணான சோனாக்‌ஷி சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் 90 கிலோ எடையில் இருந்தார்.

சாப்பாட்டு பிரியரான சோனாக்‌ஷி பல கேலிகளுக்கு ஆளான பின்னர் உடல் எடையை குறைத்து காட்டுவது என சபதம் எடுத்தார்.

அதை செய்து காட்டி இன்று கச்சிதமான உடல் வாகுடன் தேவதையாக வலம் வருகிறார்.

உடல் எடையை குறைத்ததை பற்றி அவரே சொல்கிறார்.

எனக்கு உடற்பயிற்சி என்றாலே பிடிக்காது. ஆனால் உடல் எடையை குறைக்கும் வைராக்கியத்தில் உடற்பயிற்சி செய்தேன்.

மேலும், சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், டென்னீஸ் விளையாடுவது, யோகா செய்வது என சரியான அணுகுமுறையில் செய்தில் கை மேல் பலன் கிடைத்தது.

இன்றும் எனக்கு பிடித்த உணவுகளை நான் சாப்பிட தவறுவதில்லை. ஆனால் சரியான அளவில் சாப்பிடுகிறேன்.

காலையில் கோதுமை ரொட்டி, பிறகு சிறிது நேரம் கழித்து பழங்கள் மற்றும் கிரீன் டீ.

மதியம் ரொட்டி மற்றும் இரவு சிக்கன், மீன் இப்படி ஏதாவது ஒன்று சாப்பிடுகிறேன்.

கொழுப்பு உணவுகளை தவிர்த்து விடுகிறேன் என தன் எடை குறைதல் ரகசியத்தை பற்றி சோனாக்‌ஷி கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்