இவர்கள் தான் உலகின் அழகிய பெண்களாம்

Report Print Printha in பெண்கள்
729Shares
729Shares
lankasrimarket.com

2017-ஆம் ஆண்டின் உலகின் டாப் 30 அழகான பெண்கள் யார் என்று பஸ்நெட் (Buzznet) எனும் இணையத்தளம் சர்வே வாக்கெடுப்பு நடத்தியதில் பாடகர்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகைகள், பாடலாசிரியர்கள், மாடல்கள் என பலரும் இடம்பெற்றனர்.

அதில் இந்தியாவின் பிரியங்கா சோப்ரா, ஹிலாரி கிளிண்டன், எம்மா வாட்சன் ஆகியோர் இந்த டாப் 10 இடத்தில் ஒருவராக உள்ளனர்.

பியோனஸ்

பியோனஸ் ஒரு அமெரிக்கன் பாடலாசிரியர். இவர் இப்போது இரண்டாவது முறையாக கருவுற்று இருக்கிறார். இவர் ஏஞ்சலினா ஜூலி, எம்மா வாட்சன், டகோடா ஜான்சன் ஆகியோர்களை வென்று இந்த முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா

ஹாலிவுட்டில் கலக்கும் பிரியங்கா சோப்ரா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த டாப் 10 பட்டியலில் தன்னை இரண்டாம் பிடிக்க வைத்த ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் பிரியங்கா.

டெய்லர் ஹில்

21 வயதுள்ள விக்டோரியா சீக்ரெட் மாடல் டெய்லர் ஹில் இந்த உலக அழகி பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க மாடலான இவரை இன்ஸ்டாகிராமில் 7.6 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

எம்மா வாட்சன்

பிரிட்டிஷ் நடிகையான எம்மா வாட்சன் சமூக சீர்திருத்த செயல்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ஹரி பாட்டர், பியூட்டி அன்ட் தி பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ள இவர் சிறந்த யூத் ஐகானாகவும் விளங்குகிறார்.

டகோடா ஜான்சன்

அமெரிக்க மாடல் மற்றும் நடிகையாக வலம் வரும் டகோடா ஜான்சன் நடிகர் மெலனி க்ரிஃபித்தின் மகள் ஆவார். இவர் ஃபிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹிலாரி கிளிண்டன்

சிறந்த அரசியல்வாதியாக திகழும் ஹிலாரி கிளிண்டன் உலக அழகி பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த இவர் பெண்களுக்கு தைரியம் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் சிறந்த வகையில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

மார்கோட் ராபி

ஆஸ்திரேலியாவின் நடிகையான மார்கோட் ராபி இந்த பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்துள்ளார். இவரது கண்கள் தான் இவரின் பெரிய அழகாக இருக்குமாம்.

ஏஞ்சலினா ஜூலி

சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் ஏஞ்சலினா ஜூலி கடந்த 2009-ல் வேனிட்டி ஃபேர் நடத்திய உலகின் அழகான டாப் டென் பெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார். இந்த ஆண்டில் எட்டாவது இடத்தினை பெற்றுள்ளார்.

ஃஹஹ்ரிவே எவன்

துருக்கி நாட்டின் நடிகையான ஃஹஹ்ரிவே எவன் தனது அழகான கண்களாலும், எழில்மிகு சிரிப்பாலும் ரசிகர்களின் இதயத்தை உருகவைத்தவர்.

அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ

அமெரிக்காவின் நடிகையான அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ, பிரியங்கா சோப்ராவுடன் பேவாட்ச் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு வயது 31. இவரது நீலநிற கண்கள் தான் இவருக்கு கொள்ளை அழகாக இருக்குமாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்