பேஸ்புக் மெசஞ்சரில் புதிய வரப்பிரசாதம்: பயன்படுத்த நீங்கள் தயாரா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தொடர்ச்சியாக புதிய வசதிகளை அறிமுகம் செய்வதன் ஊடாக தனது பயனர்களின் எண்ணிக்கையை பேஸ்புக் நிறுவனம் தக்க வைத்துக்கொண்டு செல்கின்றது.

இதன்தொடர்ச்சியாக மற்றுமொரு வரப்பிரசாதத்தையும் பயனர்களுக்கு வழங்க பேஸ்புக் முன்வந்துள்ளது.

அதாவது புகைப்படங்களை பரிமாற்றம் செய்வதில் இதுவரை இருந்த தடை நீக்கப்பட்டு எதிர்காலத்தில் 4K புகைப்படங்களையும் பேஸ்புக் மெசஞ்சர் ஊடாக அனுப்பி மகிழ முடியும்.

ஒவ்வொரு மாதமும் பேஸ்புக் மெசஞ்சரின் ஊடாக 17 பில்லியன் புகைப்படங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு புகைப்படங்களின் தெளிவை கூட்டும் வகையில் இந்த வரப்பிரசாதம் தரப்பட்டுள்ளது.

தற்போதுள்ள ஐபோன்கள் மற்றும் அனேகமான அன்ரோயிட் கைப்பேசிகளிலும் 4K புகைப்படங்களை எடுக்கும் வசதிகள் காணப்படுகின்றன.

எனவே அனைத்து பேஸ்புக் பயனர்களுக்கும் இனி கொண்டாட்டம்தான்.

எனினும் தற்போது இவ் வசதி அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளில் அடுத்து வரும் ஓரிரு வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்