டிக் டாக்கின் அதிரடி நடவடிக்கை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சீனாவால் உருவாக்கப்பட்ட டிக் டாக் அப்பிளிக்கேஷன் ஆனது உலக அளவில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளமை தெரிந்ததே.

இந்த அப்பிளிக்கேஷன் ஆனது மாதாந்தம் 500 மில்லியன் செயற்படு நிலையில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் கட்டணம் செலுத்தப்பட்ட அரசியல் ரீதியான விளம்பரங்களை தடை செய்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் இத் தடை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வேட்பாளர் தொடர்பாகவோ, தற்போதைய தலைவர்கள் தொடர்பாகவோ, அரசியல் கட்சி அல்லது குழு தொடர்பாகவோ, மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளூர் அரசியல் தொடர்பாகவோ எந்தவொரு விளம்பரத்தையும் கட்டணம் செலுத்தி மேற்கொள்ள முடியாது.

இதேவேளை இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்கிய பைட் டான்ஸ் நிறுவனம் எதிர்பார்த்ததை விடவும் அதிக வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது சுமார் 7 பில்லியன் டொலர்களை இதுவரை வருமானமாக ஈட்டியுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்