iOS 13-ற்கான இன்ஸ்டாகிராமில் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இன்ஸ்டாகிராமானது ஐபோன் சாதனங்களுக்கான தனது அப்பிளிக்கேஷனை அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது.

இதில் Dark Mode வசதியானது உள்ளடக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் அல்லது சூழலுக்கான ஒளி குறைவாக உள்ள நிலையில் மொபைல் சாதனங்களை பயன்படுத்தும்போது பயனர்களின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன.

இதனை தவிர்ப்பதற்காக மொபைல் அப்பிளிக்கேஷன்களில் Dark Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

முன்னணி அப்பிளிக்கேஷன்களில் இவ் வசதிகள் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் ஆனது தற்போது iOS 13-ற்கான பதிப்பில் குறித்த வசதியினை உள்ளடக்கியுள்ளது.

இவ் வசதி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers