வாட்ஸ் ஆப்பின் இமாலய சாதனை

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இன்று அதிகளவில் பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இலவசமாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றமை மற்றும் துல்லியமான தரவுப்பரிமாற்றம் என்பன இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் வாட்ஸ் ஆப் செயலியானது தற்போது முக்கிய மைல் கல் ஒன்றினை எட்டியுள்ளது.

அதாவது இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து மாத்திரம் சுமார் 5 பில்லியன் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கூகுள் நிறுவனத்தினுடையதல்லாத அப்பிளிக்கேஷன் ஒன்று 5 பில்லியன் தரவிறக்கங்களை தாண்டுவது இது இரண்டாவது தடவையாகும்.

இதில் முதலிடத்தில் காணப்படுவது பேஸ்புக் அப்பிளிக்கேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்