பழைய தகவல்களை பகிரப்போகின்றீர்களா? பேஸ்புக் தரும் புத்தம் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அனேகமானவர்கள் தமது பேஸ்புக் தளத்தில் செய்தி இணைப்புக்களை பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு பேஸ்புக் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது ஏற்கணவே பேஸ்புக் கணக்கில் பகிர்ந்த பழைய தகவல் ஒன்றினை மீண்டும் பகிர முற்படும்போது செய்தி ஒன்றினை காண்பிக்கும் வசதியே இதுவாகும்.

இதன்படி 3 மாதங்களுக்கு (90 நாட்கள்) முன்னர் பகிர்ந்த தகவல் ஒன்றினை மீண்டும் பகிர முற்படின் குறித்த செய்தி காண்பிக்கப்படும்.

எவ்வாறெனினும் குறித்த செய்தியை மீண்டும் பகிரப்போகின்றீர்கள் எனின் Continue என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இல்லை எனில் Go Back என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

இப் புதிய வசதியானது பயனர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்