ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் மீண்டும் வழமைக்கு திரும்பியது Zoom

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தற்போது Zoom எனப்படும் வீடியோ கொன்பரன்ஸ் சேவையானது மிகவும் பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

பல மில்லியன் பயனர்கள் உலகெங்கிலுமிருந்தும் பயன்படுத்தி வருகின்றனர்.

இச் சேவையானது நேற்றைய தினம் சில மணித்தியாலங்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

எனினும் பின்னர் வழமைபோன்று தனது சேவையை ஆரம்பித்திருந்தது Zoom.

இந்த தகவலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது தொடர்ந்தும் இச் சேவை ஸ்தம்பிதம் அடைவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை உட்பட பல வியாபார நிறுவனங்களிலும் லொக்டவுன் காலத்தில் இச் சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்