ஐபோன் பயனர்களுக்கான வாட்ஸ் ஆப்பில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக கடந்த மாதம் தகவல் வெளியாகியிருந்தது.
இதன்படி வால்பேப்பர் வசதியில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
பயனர்கள் சட் செய்யும்போது அதன் பின்னணியை விரும்பிய வால்பேப்பர் கொண்டு அழகுபடுத்த முடியும்.
இதேபோன்ற மாற்றத்தை அன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப் அப்பிளிக்கேஷனிலும் கொண்டுவரவுள்ளதாக WABetaInfo தெரிவித்துள்ளது.
இவ் வசதியினைக் கொண்ட 2.20.299.5 எனும் புதிய பதிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
WhatsApp Wallpaper அப்பிளிக்கேஷன் ஆனது 9 வருடங்களுக்கு பின்னர் தற்போதே அப்டேட் செய்யப்படவுள்ளது.
இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி இறுதியாக அப்டேட் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.