அன்ரோயிட் சாதனங்களில் இனி இந்த அப்பிளிக்கேஷன் இயங்காது

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
72Shares

மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்களில் முன்னணியில் அன்ரோயிட் திகழ்கின்றது.

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இவ் இயங்குதளத்தில் பல இலவசமான அம்சங்கள் தரப்பட்டுள்ளமை தெரிந்ததே.

இவற்றுள் கூகுள் மெசேஜ் சேவையும் ஒன்றாகும்.

மிகவும் பிரபலமான இக் குறுஞ்செய்தி சேவைக்கான அப்பிளிக்கேஷனானது எதிர்காலத்தில் சில அன்ரோயிட் சாதனங்களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து கூகுள் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்படாத அல்லது உறுதிப்படுத்தப்படாத அன்ரோயிட் சாதனங்களில் குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியாது.

கூகுள் மெசேஜ் அப்பிளிக்கேஷன் ஆனது கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

எனினும் இதுவரை எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்துவிதமான அன்ரோயிட் சாதங்களிலும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்