மலாக்காவில் தமிழர்கள் நிர்வகிக்கும் வழிபாட்டுத் தலங்கள்

Report Print Maru Maru in ஆசியா
566Shares
566Shares
ibctamil.com

மலாக்கா, மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று, அதன் மூன்றாவது சிறிய மாநிலம். ஆனாலும் அதற்கு உள்ள வரலாற்றுச் சிறப்பும், சுற்றுலாச் சிறப்பும் பெரியது.

தீபகற்ப நாடான மலேசியாவின் தெற்கில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 140 கி.மீ தொலைவில் இது அமைந்துள்ளது. மலாக்காவின் தலைநகரும் மலாக்கா தான்.

இதில் மத்திய மலாக்கா, அலோர் காஜா, ஜாசின் என மூன்று மாவட்டங்கள் உள்ளன. இதற்கு தென்மேற்கே மலாக்கா நீரிணையும் சுமத்திரா தீவும் இருக்கின்றன. வடக்கே நெகிரி செம்பிலான் மாநிலமும், தெற்கே ஜொகூர் மாநிலமும் உள்ளன.

உலக பாரம்பரிய தளம்

’மலாக்காவை பார்த்தால் மலேசியாவை பார்க்கலாம்’ என்று பார்த்தவர்களால் சொல்லப்படும் வாய்மொழி மிகப் பொருத்தமே!

மலாக்காவை உலக பாரம்பரியத் தளங்களுள் ஒன்றாக யுனெஸ்கோ 2008 ஜூலை 7 ல் அறிவித்தது. 600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிறிய நகரம். ஆனாலும், சுவாரஸ்யமான வரலாற்று திருப்பங்களை உடையது.

திருப்பங்களான வரலாற்று சுருக்கம்

போரில் பாதுகாத்துக்கொள்ள தப்பி இங்கு வந்த மன்னன் பரமேஸ்வரன் ஒரு நகரை உருவாக்கி ஆட்சி செய்தது.

வணிகம் காரணமாக, கப்பலில் வந்த சீனர்கள், அரபுகள் அங்கு குடியேறியது. அதில் நடந்த கலப்பு மணம். அதனை தொடர்ந்து உருவான புதிய இனம்.

போர்த்துக்கீசியரகள், டச்சுக்காரர்கள், கிழக்கிந்திய கம்பேனியர் வருகை, அவர்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்கள், ஆங்கிலேயர் காலனி ஆட்சி வரலாறு,

கொஞ்சகாலம் ஜப்பானியரின் கட்டுப்பாடு, சுதந்திரத்திற்குப் பிறகு, மலாயன் யூனியன், கூட்டரசு மலாயா, இப்போது மலேசியா என தொடர்கிறது மலாக்காவின் பயணம்.

மலாக்கா உருவானது எப்படி?

1401 ம் ஆண்டு, ஜாவா தீவின் மன்னன் மஜாபாகித் சிங்கப்பூரின் மீது படையெடுத்தார். சிங்கப்பூரை ஆட்சிசெய்த பரமேஸ்வரன் தப்பி ஓடி, ஒரு மரத்தடியின் கீழ் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது, அவனோடு இருந்த நாய்களில் ஒன்றை, அங்கு நின்ற சருகு மான் எட்டி உதைத்து, ஆற்றில் தள்ளியது.

அந்த காட்சியைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மன்னன் பலவீனமான ஒன்று எதிர்க்கும் ஆற்றல் பெறுகிறது என்றால், இந்த இடம் மகிமையுள்ள இடமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், அந்த இடத்திலே ஒரு நகரை நிர்மாணிக்க. அங்கு வாழ்ந்த மீனவர்களையும் உள்ளூர் வாசிகளையும் சேர்த்து ஒரு ஒன்றுபட்ட குடியிருப்புப் பகுதியை முதலில் உருவாக்கினார்.

பிறகு ஒரு அரசை உருவாக்கி, தான் இழந்த ஆட்சியை ஈடுசெய்தார். அவர் உட்கார்ந்திருந்த மரம் மலாக்கா மரம், அது தந்த போதனை நினைவாக நகருக்கும் அதே பெயர் வைக்கப்பட்டது.

பின்னாளில், பரமேஸ்வரன் தன் பெயரை இஸ்கந்தார் ஷா என மாற்றிக்கொண்டு இஸ்லாம் மதத்தை தழுவினார். இவருக்கு ஸ்ரீ மகாராஜா எனும் மற்றொரு பெயரும் இருந்தது. இவரே சிங்கப்பூரின் கடைசி ராஜாவாகவும் இருந்தார். சிங்கப்பூரின் பழைய பெயர் துமாசிக் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான வணிகதளம்

அந்த காலகட்டத்தில், இந்தியா, இலங்கை, பாரசீக நாடுகளுக்கு வணிகம் செய்யப்போகும் சீனக் கப்பல்கள் மலாக்கா நீரிணையைப்பயன்படுத்தி வந்தன. அதனால், துறைமுகத்தில் சில சலுகைகளும் வழங்கப்பட அதிக வணிக கப்பல்கள் வரத்தொடங்கின. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மலாக்கா முக்கிய வணிகதளமானது.

ஏ பமோசா கோட்டை

மலாக்காவை ஆண்ட சுல்தான் முகமது ஷாவை போர்த்துக்கீசியர்கள் நவீன ஆயுதங்களால், தோற்கடித்த பிறகு, கட்டிய ’ஆ பாமோசா’ என்ற கோட்டை இன்னும் உள்ளது. காட்டில் மறைவாக இருந்து சுல்தான் அவ்வப்போது தாக்கிய சிதைவுகளும் வரலாற்று தழும்புகளாக இன்னும் உள்ளன.

பாபா நோஞ்ஞா அருங்காட்சியகம் மற்றும் சுலதான்களின் அரண்மனை பாரம்பரிய அரும் பொருள் காட்சியம் என இரண்டு உள்ளன.

ஏனைய சுற்றுலாத் தலங்கள்

மலேசியா வரும் மக்களை மலாக்கா பெரிதும் கவர்கிறது.

வரலாற்றுக் கட்டடங்கள், மலாக்கா கடல் சார்ந்த அருங்காட்சியகம், மலாக்கா ஸ்டதைஸ் சதுக்கம், சிதைந்த நிலையில் உள்ள ‘ஏ பமோசா கோட்டை’, செங் ஊன் டெங் கோயில், ஒராங் ஊத்தான் மாளிகை, கம்போங் கிளிங் பள்ளிவாசல், டான் பெங் சுவீ மணீக்கூட்டுக் கோபுரம், புனித பிரான்சிஸ் சேவியர் சிலை, மலாக்கா கிரைஸ்ட் தேவாலயம் ஆகிய இடங்கள் பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிறது.

சுற்றுலாத் துறை

சுற்றுலாத்துறையும் உற்பத்தித்துறையும் இங்கு மிகமுக்கியம். சீனா, ஆஸ்திரேலியா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, இங்கிலாந்து, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்துதான் அதிக பயணிகள் இங்கு வருகின்றனர்.

தொழிற்சாலை

பல நாடுகளில் இருந்தும் இங்கு தொழில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சிறிய மாநிலத்தில் மட்டும் 25 க்கும் மேற்பட்ட தொழிற்பேட்டைகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 500 முதல் 800 வரையிலான தொழிற்சாலைகள் உள்ளன. இதனால் ஆயிரக்கணக்கானவருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

ருசி உணவு

மலேசியாவில் குறைவான விலையில் உணவுப்பொருள்கள் கிடைப்பது மலாக்காவில்தான்.

சிங்கப்பூரிலிருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிகள் வந்து மலாக்காவில் பிடித்தமான உணவை சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். உணவுகளில் ஈக்கான் அசாம் பெடாஸ் (உரைபுளிப்பு மீன்), சம்பால் பெலாச்சான், செஞ்சாலூக் போன்றவை அனைத்து சமூகத்தினரையும் சுவையில் ஈர்ப்பவை.

சன்னாசிமலை ஆலயம்

மலாக்காவிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் ’குருபோங்’ எனும் சிறு நகரம் உள்ளது. அங்குதான் 150 ஆண்டுகள் பழமையான சன்னாசிமலை ஆலயம் உள்ளது. இந்த கோயில் திருவிழா விமரிசையாக நடக்கிறது. முருகப்பெருமானுக்கு சீனர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

மலாக்கா செட்டி சமூகத்தவர்

தற்போது மலாக்காவில் வசித்துவரும் செட்டி சமூகத்தவர் ஐந்தாவது தலைமுறையை சேர்ந்தவர்கள். இங்கு குடியேறிய அவர்கள் சில இந்து கோயில்களை அமைத்து வழிபட்டனர். பழமையான அந்த கோயில்கள் ஸ்ரீ பொய்யாத வினாயகர் கோயில் (1781), ஸ்ரீ காளியம்மன் ஆலயம் (1804), ஸ்ரீ முத்துமாரியம்மன் (1822), கைலாசநாதர் சிவன் ஆலயம் (1887), ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் (1888) இந்த கோயில்கள் இப்போது இலங்கை தமிழர்களால் நிர்வகித்து வரப்படுகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments