ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Report Print Arbin Arbin in ஆசியா

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.

புதன்கிழமையான இன்று நண்பகலில் 12.30 மணியளவில் ஆப்கானிஸ்தானில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

இந்திய தலைநகர் டெல்லியிலும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் 178 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் தோன்றியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்லது.

பாகிஸ்தானின் Bela நகரில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பல பகுதிகளில் பொதுமக்கள் நிலநடுக்கத்தால் அலறியடித்தபடி வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் இருந்து உடனடியாக அலுவலர்களை பாதுகாப்பாக வெளியேற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers