பெரும் சத்தத்துடன் வெடித்த எரிமலை: பீதியில் பொதுமக்கள்

Report Print Kabilan in ஆசியா

இந்தோனேஷியாவில் மெராபி எரிமலை வெடித்ததுடன், சாம்பல் புகையை கக்கி வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் உள்ளது மெராபி எனும் எரிமலை, இது பெரும் சத்தத்துடன் சுமார் 5500 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகையை கக்கியுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் சாம்பல் படர்ந்து காட்சியளிக்கிறது. மேலும், சாம்பல் புகை சூழ்ந்துள்ளதால் எரிமலைக்கு அருகில் உள்ள பெரிய நகரமான யோகியாகர்த்தில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எரிமலைக்கு 3 மைல் தொலைவிற்குள் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆய்வாளர்கள் கூறுகையில், எரிமலைக்குள் நெருப்பு குழம்பு கொதிக்கும் நிலையில், முதற்கட்டமாக சாம்பல் பறக்கிறது.

அடுத்த சில நாட்களில் நெருப்பு குழம்பை அள்ளி வீசி எரிமலை முழு வீச்சில் சீற்றத்தை காட்டும் என தெரிவித்துள்ளனர்.

ஹவாய் தீவுகளில் எரிமலை சீறிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தோனேஷியாவில் இந்த எரிமலை வெடித்துள்ள சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.

AP/Muhammad Amin

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers