ஐ.எஸ் போட்ட பலே திட்டம்.. 24 பேரை சுட்டுக்கொன்று முறியடித்தது சிறைத்துறை

Report Print Basu in ஆசியா

மத்திய ஆசியா நாடான தஜிகிஸ்தானில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் 24 பேர் உட்பட 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் துஷன்பேவில் உள்ள சிறைச்சாலையில் வெடித்த கலவரத்தில் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த 24 கைதிகள், மூன்று பாதுகாப்பு வீரர்கள, மற்ற கைதிகள் ஐந்து பேர் என 32 கொல்லப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஞாயிறுக்கிழமை மாலை சிறையில் கலவரம் வெடித்தது, முதலில் ஐ.எஸ் கைதிகள் சேர்ந்து, மூன்று பாதுகாப்பு அதிகாரிகளை குத்தி கொன்றுள்ளனர். பின்னர், மற்ற கைதிகளை அச்சுறுத்தும் நோக்கில் ஐந்து கைதுகளையும் குத்தி கொன்றுள்ளனர்.

இதனையடுத்து, மற்ற கைதிகளை பணயக்கைதிகளாக பிடித்து வைத்தனர். இந்நிலையில், சிறைத்துறை அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், கலவரத்தில் ஈடுபட்ட ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்டனர், 25 பேர் கைது செய்யப்பட்டனர். பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு நிலையில் சிறையில் தற்போது அமைதி நிலை திரும்பியுள்ளதாக சிறைத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த பெரும்பாலானோரை தப்பிக்க வைக்கும் நோக்கிலே இந்த கலவரம் முன்னெடுக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்