காஷ்மீரில் வெள்ளை கொடியுடன் பாகிஸ்தான் ராணுவம்... இந்தியாவிடம் சமாதானம்: புகைப்படத்தின் உண்மை பின்னணி

Report Print Basu in ஆசியா

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளை கொடியுடன் இந்திய வீரர்களிடம் சமாதானம் நாடியதாக குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த ராஜ்தீப் ராய் என்ற நபர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படத்தை ஆகஸ்ட் 4ம் திகதி பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தில், பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளை கொடியுடன் நிற்பதை, இந்திய ராணுவ வீரர் ஒருவர் பார்ப்பது போல் இருக்கிறது.

பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவிடம் வெள்ளை கொடியுடன் சமாதானம் நாடியதாக அந்த பதிவில் குறிப்பிட்டட ராஜ்தீப், இதற்காக இந்திய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புகழ்ந்து பதிவிட்டார்.

இந்த பதிவை பலரும் பகிர சமூக வலைதளங்களில் வைரலானது குறித்த புகைப்படம்.

ஆனால், குறித்த புகைப்படம் கடந்த மாதம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரில் இருந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஏழு வயது சிறுவனின் சவப்பெட்டியை இந்திய வீரர்கள் ஒப்படைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என கண்டறியப்பட்டுள்ளது.

சவப்பெட்டி ஒப்படைப்பு நடைமுறையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இப்போது தவறான கூற்றுடன் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்