தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மகரம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

Report Print Meenakshi in ஜோதிடம்
உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2

உதவும் மனபான்மை கொண்ட மகரராசி அன்பர்களே!

பொன்னான காலம் முன்னேற்றம் சேரும்

ஆண்டின் தொடக்கத்தில் ராசிக்கு 9ல் உள்ள குரு, செப்.1ல் 10-ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார். அவர் 2018 பிப்.13ல் 11ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.

8-ம் இடமான சிம்மத்தில் உள்ள ராகு, ஜீலை 26-ல் 7ம் இடமான கடகத்திற்கு மாறுகிறார். 2-ம் இடமான கும்பத்தில் உள்ள கேது, ஜீலை 26-ல் உங்கள் ராசிக்கு வருகிறார்.

ராசிக்கு 11ம் இடமான விருச்சிகத்தில் உள்ள சனி டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரகநிலையின் அடிப்படையில் பலனைக் காணலாம்.

ஏப்ரல் 14- ஜீலை 31

பொற்காலம் என்ற அளவுக்கு வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சியில் வெற்றி உண்டாகும்.

சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும்.

பெண்களால் மேன்மை கிடைக்கும். புதிய வீடு-மனை, வாகனம் வாங்க யோகம் உண்டு. பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கப்பெறுவர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். கலைஞர்கள் புகழ், பாராட்டு பெற்று மகிழ்வர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் மேம்பாடு காண்பர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி பெறுவர். விவசாயிகள் நவீன விவசாயத்தில் ஈடுபட்டு வருமானம் அடைவர். பெண்கள் வாழ்வில் குதூகலம் காண்பர். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ஆகஸ்ட் 1- 2018 ஜனவரி 31

குரு சாதகமற்று இருப்பதால் தடைகள் குறுக்கிடலாம். ஆனால் அதை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள்.

பொன், பொருள் சேரும். உறவினர் வருகையால் நன்மை கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். விடா முயற்சி இருந்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்.

தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். கடந்த கால உழைப்பின் பயனாக சீரான ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு இன்றி உழைக்க நேரிடும்.

மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. விவசாயிகள் உழைப்பிற்கேற்ப வருமானம் காண்பர். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

2018 பிப்ரவரி 1-ஏப். 13

குருவின் பலத்தால் சமூக மதிப்பு உயரும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமணம் இனிதே நடந்தேறும்.

பணியாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற்று மகிழ்வர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி காண்பர். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும்.

வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். பெண்கள் கணவரின் அன்புக்கு உரியவராவர். பிறந்த வீட்டினரின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனை. சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் தீபம். செல்ல வேண்டிய கோவில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி.

- Dina Malar

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments