தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மீனம் ராசிக்காரர்களின் கவனத்திற்கு

Report Print Meenakshi in ஜோதிடம்
2312Shares
2312Shares
lankasrimarket.com

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி

பொறுமையின் இலக்கணமாக திகழும் மீன ராசி அன்பர்களே!

மாடி கட்டலாம் கோடி சேர்க்கலாம்! ஆண்டின் தொடக்கத்தில் 7-ல் உள்ள குரு செப்.1ல் 8ம் இடமான துலாம் ராசிக்கு செல்கிறார்.

அங்கிருந்து 2018 பிப்.13ல் 9ம் இடமான விருச்சிக ராசிக்கு மாறுகிறார். ராகு 6-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜீலை 26-ல் 5ம் இடமான கடகத்திற்கு வருகிறார்.

கேது 12ம் இடமான கும்பத்தில் இருந்து ஜீலை 26-ல் 11ம் இடமான மகரத்திற்கு செல்கிறார். ராசிக்கு 9-ல் இருக்கும் சனி டிச. 18-ல் 10ம் இடமான தனுசுக்கு மாறுகிறார். இந்த கிரக நிலையில் பலனைக் காணலாம்.

ஏப்ரல் 14- ஜீலை 31

பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறக்கும்.

மாடி மீது மாடி கட்டும் யோகம் உண்டாகும். கோடீஸ்வரனாக வாழும் பாக்கியம் அமையும். உறவினர்களில் உதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சி விமரிசையாக நடக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கை நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும்.

அரசு வகையில் நன்மை ஏற்படும். ராகுவால் போட்டியாளர் சதியை முறியடிப்பீர்கள். கலைஞர்கள் புகழ், பாராட்டு பெறுவர். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் திகழ்வர்.

மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சுமூகத்தீர்வு கிடைக்கும். பெண்களால் குடும்பம் சிறக்கும். சுற்றுலா சென்று மகிழ்வர்.

ஆகஸ்ட் 1- 2018 ஜனவரி 31

கேதுவின் பலத்தால் நல்ல பணப்புழக்கம் ஏற்படும். முயற்சியில் இருந்த தடை விலகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணியாளர்களுக்கு பணிச்சுமை கூடும்.

பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் காணலாம்.

வியாபாரம் விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். பெண்கள் வகையில் நன்மை ஏற்படும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற விடாமுயற்சி தேவைப்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.

மாணவர்கள் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. ஆசிரியரின் ஆலோசனை நல்வழி காட்டும். விவசாயிகள் கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் காண்பர்.

வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள் குடும்பத்தாரிடம் விட்டு கொடுத்து போகவும். சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.

2018 பிப்ரவரி 1- ஏப்ரல் 13

நினைத்தது நிறைவேறும். பணப்பழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடந்தேறும்.

புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. பணியாளர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். சம்பள உயர்வு கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பெண்களை பங்கு தாரர்களாக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும்.

கலைஞர்களுக்கு எளிதில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் புதிய பதவி பெறுவர். மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலை பெறுவர்.

மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி பெறுவர். விவசாயிகள் எதிர்பார்த்த மகசூலை பெறுவர். புதிய நிலம் வாங்கலாம். பெண்கள் குழந்தைகளால் பெருமை அடைவர்.

பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு. ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை. செய்ய வெல்ல வேண்டிய கோவில், நாமக்கல் ஆஞ்சநேயர்.

- Dina Malar

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments