இந்த ராசிக்காரர்களின் காதல் ஜெயிக்குமாம்: உங்க ராசி இதுல இருக்கா?

Report Print Printha in ஜோதிடம்

ஜாதக கிரக நிலைகளான லக்னாதிபதி, சுக்கிரன், குரு, புதன், ஏழாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் சேர்க்கை, பார்வை ஆகிய அனைத்தும் தான் ஒருவரின் ஜாதகத்தில் காதல் திருமணங்கள் நடக்கத் தூண்டுகிறது.

அதன்படி எந்த ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யாருக்கு காதல் ஜெயிக்கும் என்பது பற்றி பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர்கள். ஆனால் இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களின் எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும்.

இவர்கள் காதலித்தாலும் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் நபரை பிராக்கெட் போடுவதில் கில்லாடிகள். இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். அதனால் இவர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி அடையும்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். பிறரிடம் இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதான ஒன்று.

இந்த ராசிக்காரர்களை மகரம் மற்றும் மேஷம் ராசிக்காரர்கள் கவர்வார்கள். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இருந்தாலும் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புள்ளது. ஆனால் அது தோல்வியிலும் முடியலாம். அதனால் இவர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் காதலிப்பதை மிகவும் விரும்புவார்கள். ஆனால் இவர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயல்வதுடன், அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பார்கள்.

இவர்களுக்கு காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. அதுவும் சிம்ம ராசி உள்ள பெண்கள் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வார்கள்.

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள்.

காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுவதுடன், இவ்விரண்டையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளது. அதனால் காதல் இவர்களுக்கு கை வந்த கலையாக இருக்கும்.

இவர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வி அடையும்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் காதலை விரும்புவதால், தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பவரையே அதிகம் விரும்புவர்கள்.

பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகவே இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார்கள். ஆனால் காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார்கள்.

காதலிப்பதற்காக தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார்கள். காதல் எண்ணம் அதிகம் இருப்பதால் துணையை அதிகமாக விரும்புவார்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இவர்கள் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசியில் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவு.

அதுவே காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. எனவே இவர்களின் காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர்கள். காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர்கள்.

ஆனால் காதல் தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. எனவே இவர்கள் காதலை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி கிடைக்கும்.

மீனம்

மீனம் ராசிக்காரர்களிடம் அன்பு, பொறுமை நிலைத்திருக்கும். இவர்களை நேசிப்பவர்களை கண்டிப்பாக நேசிப்பார்கள்.

உணர்ச்சியை தரக்கூடிய செயல்களை செய்யும் இவர்கள், தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவராக திகழ்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்