சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

Report Print Printha in ஜோதிடம்

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு நல்லது நடக்கப் போகிறது. அதே நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் கடினமான காலம் உருவாகிக்கொண்டுள்ளது.

எனினும் அதற்குரிய கோயில்களில் பரிகாரம் செய்தால் சனியின் வீரியம் குறைய வாய்ப்புள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

மேஷம், கடகம், சிம்மம் உள்ளிட்ட ராசிக்காரர்களுக்கு நல்லகாலம் பிறந்துவிட்டது. அதே நேரத்தில் மற்ற ராசிக்காரர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய கோவில்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

சனிபெயர்ச்சி என்றாலே காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர்.

இங்குள்ள நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானை தரிசித்து வருகின்றனர். சனிபாகவனை தரிசித்து பரிகாரம் செய்த திருநாள்ளாறு மட்டுமல்ல இன்னும் சில ஆலயங்களுக்கும் சென்று வரலாம் என்கின்றனர் ஆன்மீக வல்லுநர்கள்.

அவரவர் ஊருக்கு அருகில் உள்ள சனீஸ்வரன் ஆலயங்களுக்கு சென்று வரலாம். மேஷம் ராசிக்கு அஷ்டம சனி முடிந்து பாக்ய சனி துவங்குகிறது.சனி இதுவரை துன்பம் தந்ததால் இனி சில பாக்யங்களை அதிர்ஷ்டத்தை தருவார்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்