நீங்கள் இந்த ராசிக்காரர்களா? இன்று எதிர்பாராத தனவரவு உண்டாகுமாம்!

Report Print Kavitha in ஜோதிடம்
613Shares
613Shares
ibctamil.com

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி என்று பார்ப்போம்.

மேஷம்

தொழிலில் நீங்கள் செய்யும் புதிய மாற்றங்களால் லாபம் அதிகரிக்கும். சுப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். வணிகம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிர்ஷ்ட எண்- 1
 • அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தனவரவுகள் மேம்படும். விரைவில் முடியும் காரியங்கள் கூட தாமதமாகும். குழப்பமான சூழ்நிலை உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிர்ஷ்ட எண்- 3
 • அதிர்ஷ்ட நிறம் - பச்சை நிறம்

மிதுனம்

தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களால் சாதகமற்ற நிலை அமையும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். நண்பர்களுக்கு இடையே பொறுமையைக் கடைபிடிக்கவும். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிர்ஷ்ட எண்- 6
 • அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

கடகம்

வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். எடுத்த செயலை முடிப்பதில் இழுபறி நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வாக்குவாதங்களால் லாபம் உண்டாகும். நட்பு வட்டம் அதிகரிக்கும். தொழிலில் மேன்மையான சூழல் ஏற்படும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிர்ஷ்ட எண்- 6
 • அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்

சிம்மம்

வீண் செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரிக்க முயல்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழல் உண்டாகும். புத்திக்கூர்மையால் பாராட்டப்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் சுப செலவுகள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - மேற்கு
 • அதிர்ஷ்ட எண்- 1
 • அதிர்ஷ்ட நிறம் - பிரவுன் நிறம்

கன்னி

எதிர்பாராத சுப செலவுகள் உண்டாகும். எடுத்த காரியத்தை நிறைவேற்ற கால தாமதமாகலாம். தொழிலில் தனவரவுகள் தாமதப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வாகனங்களுக்கான பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.

 • அதிர்ஷ்ட திசை - கிழக்கு
 • அதிர்ஷ்ட எண்- 1
 • அதிர்ஷ்ட நிறம் - மயில் நீலம்

துலாம்

எதிர்காலப் பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வீர்கள். தொழில் தொடர்புடைய செயல்களை முடிக்க கால தாமதமாகும். பணியில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை மேலோங்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிர்ஷ்ட எண்- 9
 • அதிர்ஷ்ட நிறம் - ஊதா நிறம்

விருச்சிகம்

பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் தேவையற்ற எண்ணங்கள் உண்டாகும். செய்யும் பணியில் சிலரின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் இலைச்சல்களால் சோர்வு ஏற்படும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - மேற்கு
 • அதிர்ஷ்ட எண்- 7
 • அதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்

தனுசு

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எண்ணங்களில் தெளிவு உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிர்ஷ்ட எண்- 4
 • அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்

மகரம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

 • அதிர்ஷ்ட திசை - வடக்கு
 • அதிர்ஷ்ட எண்- 9
 • அதிர்ஷ்ட நிறம் - பிங்க் நிறம்

கும்பம்

செல்வாக்கு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும். திறமைகள் வெளிப்படுவதற்கான புதிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பணியில் திருப்தியான சூழல் அமையும்.

 • அதிர்ஷ்ட திசை - மேற்கு
 • அதிர்ஷ்ட எண்- 8
 • அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்

மீனம்

தாய்வழி உறவினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். புத்திரர்கள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான தன உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை உயர் அதிகாரிகளிடம் அதிகரிக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும்.

 • அதிர்ஷ்ட திசை - தெற்கு
 • அதிர்ஷ்ட எண்- 5
 • அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்