இன்றைக்கு ஆடை ஆபரண சேர்க்கை யாருக்கு ஏற்படும்!

Report Print Trinity in ஜோதிடம்
171Shares
171Shares
ibctamil.com
மேஷம்

பொருளாதார சூழ்நிலைகள் திருப்தியாக இருக்கும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் தீரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சேமிக்கும் படி வருமானம் உயரும். அதே நேரத்தில் எதிர்பாராத தடைகள் வரலாம் கவனம்.

ரிஷபம்

தேக ஆரோக்கியம் பலம் பெரும். கடன் தீரும். எதிர்பார்த்த விடயங்கள் அனுகூலமாக முடியும். செய்யும் தொழிலில் மேலதிகாரிகளின் அனுசரணை உண்டு . இருப்பினும் உங்களின் யதார்த்தமான பேச்சு பிறரை சங்கடப்படுத்தலாம் கவனம்.

மிதுனம்

குடும்ப உறவுகளிடம் விவாதம் வேண்டாம். பொருளாதாரம் பரவாயில்லாமல் இருக்கும். நெருக்கமானவர்களின் பிரிவு மனவருத்தம் தரும். சுப செலவீனங்கள் ஏற்படும். வீடு வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் ஏற்படக் கூடும்.

கடகம்

நண்பர்கள் ஆதரவு தருவார்கள். கடன் தொல்லைகள் தீரும். விடாமுயற்சிக்கு வெற்றி கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெண்களுக்கு செல்வாக்கு மிகுந்த நாளாக இருக்கும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

சிம்மம்

நல்லவர்கள் ஆதரிப்பார்கள். தொழில் வியாபாரம் வளம் பெரும். வீடு உபயோக பொருட்கள் வாங்க நேரிடும். கரிய அனுகூலம் கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செய்யும் தொழிலில் வளர்ச்சி இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

கன்னி

நண்பர்கள் உதவலாம். வீண் வாக்குவாதம் தவிர்க்க வேண்டிய நாள். லாபம் சுமாராக இருக்கலாம். வாகன பயணத்தில் மிதமான வேகம் பின்பற்றுவது நல்லது. பண வரவு நிம்மதி தரும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். ஆன்மிக ஈடுபாடு நன்மை தரும்.

துலாம்

தொழில் வியாபார வளர்ச்சி சீராக இருக்கும். தகுதிக்கு மீறிய எதையும் செய்து முடிப்பதாக வாக்குறுதி தர வேண்டாம். விஷ பிராணிகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

விருச்சிகம்

இன்று உற்சாகமான நாளாக அமையும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மனதில் நல்ல எண்ணங்கள் நிலவும். பெண்கள் குடும்ப உறுப்பினர் நலனுக்காக பணிகள் செய்வார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

குடும்ப கஷ்டங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணியாளர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். பிடிக்காதவர்கள் மற்றும் மறைமுக எதிர்ப்பாளர்களால் பிரச்சனை ஏற்படலாம். பாதுகாப்பற்ற இடங்களுக்கு போக வேண்டாம். தெய்வ வழிபாடு நிம்மதி தரும்.

மகரம்

தொழில் வியாபார வளர்ச்சி மேம்படும். நியாயத்துக்கு கட்டுப்பட்டு நடப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். திட்டமிட்ட செயல்கள் நிறைவேறலாம் .தேவையற்ற விடயங்களை மனதிற்குள் கொண்டு செல்லாமல் தவிர்ப்பது நன்மை தரும்.

கும்பம்

காலத்தின் அருமை உணர்ந்து செயல்படுவது நன்மை தரும். நிலுவை பணம் வசூலாகும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வியாபாரத்தில் லாபம் சராசரியாக இருக்கும். சுப செலவு உண்டு. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய நேரம் இது.

மீனம்

அன்றாட வேலைகளை ஆர்வமுடன் செய்விர்கள். வியாபாரம் திட்டமிட்ட வளர்ச்சி பாதையில் செல்லும். நண்பர்கள் அனுசரிப்பார்கள். சுபகாரிய தடைகள் அகலும். பணியாளர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்