இன்று இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு சுப செய்தி தேடி வரப்போகுதாம்! உங்க ராசி இருக்கா?

Report Print Kavitha in ஜோதிடம்

இன்று இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் சுப செய்தி தேடி வரப்போகுதாம். இதில் உங்கள் ராசி இருக்கா என்று பார்ப்போம்

மேஷம்

வீட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். வீட்டில் உள்ளவர்களுக்கும் உங்களுக்கும் பெரிய மகான்களின் ஆசிர்வாதங்கள் கிடைக்கும். மனதில் நினைக்கும் எண்ணங்கள் அத்தனையும் மேம்பட்டதாக இருக்கும். வீட்டுக்கு சுப செய்திகள் வந்து சேரும். வேலை சம்பந்தமாக அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக கருநீலமும் இருக்கும்.

மிதுனம்

தொழிலில் புதிய வாய்ப்புகள் தானாக தேடி வரும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உண்டாகும். வீட்டுக்கு உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். வீட்டில் மனைவியின் ஆசைகளை நிறைவேற்றுவதன் மூலம் கணவன், மனைவிக்கு இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியினால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

வெளியூா் பயணங்களின் வழியாக தொழிலுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். தொழிலில் இதுவரை இருந்து வந்த இடர்பாடுகள் விலகி ஓடிவிடும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலுக்கு வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் மீது மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.

தனுசு

முக்கிய உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு மேல் உள்ள தலைமை அதிகாரிகளுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நெருங்கிய நண்பர்களிடத்தில் இருந்து வந்த சிறுசிறு மனக்கசப்புகள் நீங்கும். நண்பர்கள் உங்களுடைய எண்ணங்களை அறிந்து செயல்பாடுவார்கள். செய்யும் செயல்களின் மூலமாக தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மகரம்

மனதில் நினைத்த காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கி, உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் விவேகமாக நடந்து கொள்ளுங்கள். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொதுப்பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.

மீனம்

மனதில் மகிழ்ச்சியான நினைவுகளை எண்ணி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களின் வழியில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வுலை பார்க்கும் இடங்களில் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களுடைய வருகையின் காரணமாக, லாபகரமான சூழ்நிலை உண்டாகும். சொத்துக்கள் வாங்கிக் குவிக்கும் எண்ணங்கள் மேலோங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers