இன்று 12 ராசிக்காரர்களுக்கும் காத்திருக்கும் பேரதிஷ்டம்

Report Print Kavitha in ஜோதிடம்

இன்றைக்கு எந்த ராசிக்காரர்களில் அனுகூலம் மற்றும் பிரதிகூலங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

மேஷம்

உடன் பிறந்த சகோரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெரியோர்களின் முழு ஆசிர்வாதமும் கிடைக்கும். திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சுப செய்திகள் வந்து சேரும். புதிய வீடு மற்றும் மனைகள் வாங்குவதற்கான சூழல்கள் உண்டாகும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். மனதில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி, புத்துணர்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

ரிஷபம்

உடல் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த சிறு சிறு இன்னல்கள் நீங்கும். எதிர் பாலினத்தவர்கள் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். வெளியூர் சம்பந்தப்பட்ட பயணங்களால் நன்மை உண்டாகும். அரசு சம்பந்தப்பட்ட செயல்களினால் ஆதாயங்கள் ஏற்படும். சுப செய்திகள் வந்து சேரும். அதன் மூலம் மனம் மகிழ்ச்சி ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.

மிதுனம்

வீட்டுக்கு எதிர்பாராத உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். வெளிநாட்டுப் பயணங்கள் மூலமாக, தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய யுக்திகளை முயற்சி செய்வீர்கள். எதிர்பாராமல் கிடைக்கும் பரிசுகளால் மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட நிறமாக இளநீல நிறமும் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் இருக்கும்.

கடகம்

ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்கின்ற தொழிலில் உங்களுடைய செல்வாக்கு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். அதனால் மனம் குதூகலமடையும். விவாதங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகளே உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் இருக்கும்.

சிம்மம்

வேலை சம்பந்தப்பட்ட விஷங்களில் உள்ள ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வீட்டில் உள்ளவர்களிடம் விவாதங்களைத் தவிர்த்து அனுசரணையோடு நடந்து கொள்ளுங்கள். விலையுயர்ந்த உடைமைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மனதுக்குள் தோன்றும் தேவையற்ற எண்ணங்களினால் மனச்சோர்வு ஏற்படும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.

கன்னி

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அதனால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு புகழ் உண்டாகும். பெற்றோரின் உடல் நலத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.

துலாம்

பிள்ளைகளின் மூலமாக வீட்டில் சாதகமான சூழல்கள் உண்டாகும். பரம்பரை சொத்துக்களில் இருநு்து வந்த பிரச்னைகள் நீங்கி,சுமூகமான நிலை உண்டாகும். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து பணவரவு உண்டாகும். தொழில் சம்பந்தமாக நீங்கள் செய்த முயற்சிகள் பெரும் வெற்றியைத் தரும். உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம்பச்சை நிறமும் இருக்கும்.

விருச்சிகம்

தொழில் சம்பந்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் மூலமாக எதிர்பார்த்த லாபங்கள் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் மூலமாக தொழில் பல முன்னேற்றங்கள் உண்டாகும். வீடு. மனை விவகாரங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் இருக்கும்.

தனுசு

முக்கியமான பணியில் உள்ளவர்களுக்கு பணியில் மேன்மையான சூழல்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். செய்கின்ற செயல்களில் பெரியோர்களின் ஆதரவு மிக அவசியம். நகை சேர்க்கை உண்டாகும். உடன் பிறந்த சகோதரர்கள் டூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமும் அதிாஷ்ட திசையாக கிழக்கு திசையும் இருக்கும்.

மகரம்

தேவையில்லாத வீண் செலவுகள் வந்து, உங்களுடைய செலவுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். வேலையிடங்களில், பணிகளில் உங்களுக்கான பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் தொழிலில் மிக நீண்ட உயரத்துக்குச் செல்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது மிக நல்லது. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கும் அதிர்ஷ்ட எண்ணாக 7ம் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் அமையும்.

கும்பம்

தொழில் ரீதியான அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். தொழில் சம்பந்தமாக சுப செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு தொழில் ரீதியாக முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதன்மூலம் லாபம் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த பணக்கஷ்டங்கள் தீரும். அரசு சார்பில் நீங்கள் எதிர்பார்த்திருந்த அனுகூலமான பலன்கள் தானாகத் தேடி வரும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட எண்ணாக 3ம் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும். தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஏன் வாயையே திறக்காமல் இருப்பது தான் உங்களுக்கு நல்லது.

மீனம்

நினைத்த காரியங்கள் ஈடேறும் நாளாக இருக்கும். பெரிய பெரிய மகான்களின் தரிசனங்கள் கிடைக்கும். உங்களுடைய வாக்குத் திறமையால் பாராட்டுக்கள் வந்து குவியும். உங்களுடைய நேர்மையைக் கண்டு பொறாமைப்படாத ஆட்களே இருக்க மாட்டார்கள். புண்ணிய காரியங்களில் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் வந்துசேரும். வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஒரு முடிவுக்கு வரும். உங்களுடைய அதிஷ்ட எண் 9. இன்றைக்கு உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய திசை வடக்காகவும் அதிர்ஷ்ட நிறம் அடர்ந்த சிவப்பு நிறமாகவும் இருக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers