இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீச போகுது என்று தெரியுமா? உடனே இதை படிங்க

Report Print Kavitha in ஜோதிடம்
593Shares
593Shares
ibctamil.com

இன்று 12 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷடம் எப்படி என்று பார்ப்போம்.

மேஷம்

தாய்வழி உறவினர்களா்ல சுப செய்திகள் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும். எண்ணிய லாபம் உண்டாகும். புதிய தொழில் வாய்ப்புகளால் அனுகூலமான பலன் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 4, அதிர்ஷ்ட நிறம் - இளம் சாம்பல்.

ரிஷபம்

செய்யும் தொழிலில் உங்களின் மதிப்பு கூடும். ஆராய்ச்சிப் பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.இளைய உடன் பிறப்புகளால் சாதகமான பலன் கிடைக்கும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய லாபம் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 6, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை.

மிதுனம்

எதிர்பாராத செலவுகள் உண்டாகும். மனதில் தேவையற்ற கவலைகள் உண்டாகும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வாகனப் பயணங்களின் போது தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 2, அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்.

கடகம்

இழந்த பொருள்களை மீட்பதற்கான சூழல் உண்டாகும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகளால் சாதகமான முடிவுகள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்.

சிம்மம்

எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். சக ஊழியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கால்நடை வளர்ப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். தொழிலில் புதுவித சலுகையும் மகிழ்ச்சியும் உண்டாகும். சாதுர்யமான புச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.

கன்னி

எந்த வேலை செய்தாலும் அதில் கொஞசம் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். உறவினர்களிடம் கருத்து வுறுபாடுகளை வளர்த்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்லுங்கள். பயணங்களால் உடல் களைப்பு உண்டாகும். மற்றவர்குளுடைய பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீட்டில் பெரியவர்களிடம் கொஞ்சம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். நினைத்த காரியங்கள் நிறைவேற சிறிது கால தாமதம் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண் 9 ஆகவும் அதிர்ஷ்ட நிறம் காவியாகவும் அதிஷ்ட திசை கிழக்காகவும் இருக்கும்.

துலாம்

வாகனங்களால் லாபம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் கையாளும் புதுவிதமான யுக்திகளால் தொழிலில் லாபம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - அடர்மஞ்சள்.

விருச்சிகம்

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். புதிய இடங்கள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 8, அதிர்ஷ்ட நிறம் - மயில் நீலம்.

தனுசு

பேச்சுகளில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். பொருளாதார நிலையில் சாதகமற்ற சூழல் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - மேற்கு, அதிர்ஷ்ட எண் - 7, அதிர்ஷ்ட நிறம் - பல வண்ண நிறங்கள்.

மகரம்

தேவையற்ற எண்ணங்களால் மனதில் குழப்பம் உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - வடக்கு, அதிர்ஷ்ட எண் - 5, அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை.

கும்பம்

தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். உடன் பிறப்புகளிடம் அன்புடன் நடந்து கொள்ளவும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட திசை - கிழக்கு, அதிர்ஷ்ட எண் - 8, அதிர்ஷ்ட நிறம் - நீல நிறம்.

மீனம்

தொழிலில் ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கி முன்னேற்றமான சூழல் உண்டாகும். அயல்நாட்டுப் பயணங்களால் சாதகமான நிலை உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருள்கள் வாங்குவீர்கள். அதிர்ஷ்ட திசை - தெற்கு, அதிர்ஷ்ட எண் - 3, அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்