கடன் தொல்லை தீர எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Report Print Jayapradha in ஜோதிடம்
704Shares
704Shares
lankasrimarket.com

ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை தான் அவர்களை கடனாளியாக்கிவிடுகிறது. மேலும் அத்தகைய கடன் தொல்லையில் இருந்து விடுபட எந்தெந்த ராசிக்காரர்கள் என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும் என பார்ப்போம்.

மேஷம்

இந்த ராசிகாரர்கள் தயிரைக் கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவிற்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம்.

ரிஷபம்

சவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம்.

மிதுனம்

தினமும் சிறிது தயிர் சேர்த்து குளித்து வர கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்திற்கு முன் செய்து வரவும்.

கடகம்

ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்- ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியை குரங்குகளுக்குக் கொடுத்து வரவும்.

சிங்கம்

ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும்.

கன்னி

சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைக்கவும்.

தனுசு

வீடிழந்தோருக்கு வீடு கட்ட செவ்வாய் கிழமைகளில் செங்கல்கள் முடிந்த அளவு வாங்கி கொடுக்கக் கடன்கள் அடைந்து நிம்மதி பெறலாம்.

மகரம்

சனிக்கிழமைகளில் எள்ளுருண்டை செய்து பலருக்குத் தானமாய் கொடுத்து வரக் கடன் தொல்லை நீங்கும்.

கும்பம்

வியாழன் மாலை 5 மணிக்கு குங்குமப்பூ சேர்த்த பாதாம் கீர் செய்து மகாவிஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து முதலில் தான் அருந்திவிட்டு பின்பு மற்றோருக்கும் பிரசாதமாய் கொடுத்து வரக் கடன்கள் அடைபடும்.

மீனம்

தொழு நோயாளிகளுக்கு ரொட்டியைத் தானமாக செவ்வாய்கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8 மணிக்குள் கொடுத்து வர கடன்கள் வேகமாக அடைய ஆரம்பிக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்