இன்று அதிக பணவரவு வர போகும் அந்த அதிஷ்டமான ராசிக்காரர் யார் தெரியுமா?

Report Print Jayapradha in ஜோதிடம்

சிலர் ஒவ்வொரு நாளும் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தினமும் ராசி பலன்களை படிக்கும் பழக்கத்தை கொண்டு இருப்பார்கள்.

அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு இன்றைய நாள் எப்படி இருக்க போகிறது என்பதையும் மற்றும் எந்த ராசிகாரர்களுக்கு அதிக பணவரவு வர போகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

இன்று மேஷ ராசிகாரர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக ஊழியர்கள் உதவியுடன் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிகளுக்கு முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிகாரகள் புதிய முயற்சி சாதகமாக முடியும்.கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.

மிதுனம்

மிதுனம் ராசிகாரர்கள் இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். .அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

கடகம்

இன்று உங்களுக்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும்.வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படக்கூடும்.அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்மம்

சிம்மம் ராசிகாரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக அமையும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் ற்பனை சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும்.

கன்னி

இன்று உங்களின் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் பணவரவு கிடைக்கக்கூடும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்

இன்று நீங்கள் புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. சிலருக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிரசித்தி பெற்ற தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்கள் வருகை உற்சாகம் தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் உடல் அசதி ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கும்.

தனுசு

இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி வெற்றி கரமாக நிறைவேறும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மகரம்

இன்று நீங்கள் தெய்வப் பணிகளை முன்னின்று நடத்துவீர்கள். மேலும் எதிலும் அவசரம் வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களைப் பற்றி விமர்சிக்கவேண்டாம். பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதை தவிர்க்கவும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.

மீனம்

இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். ஆனால் தேவையான பணம் கையிலிருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடம் ஏற்பட்டு நீங்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்