இன்றைய ராசி பலன்கள்(20.05.2019)... பெரும்பாலும் இன்று பெண்களுக்கு நல்லநாள்!

Report Print Abisha in ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (20/05/2019) நாள் பலன் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்

மேஷம்

 • மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் முழுவதும் சந்திராஷ்டமம் ஆக இருப்பதால் வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.
 • பேச்சில் நிதானம் தேவை. குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்க கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
 • புதிய தொழில் முயற்சிகள் புதிய ஒப்பந்தங்கள் போன்றவற்றை தவிர்ப்பது நலம்.
 • சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு.
 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு நல்ல பெயரை பெறுவார்கள்.
 • நிதித்துறை, சுற்றுலாத்துறை உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் கூடுதலான வேலைப்பளுவை கொடுக்கும் நாளாக இருக்கும்.
 • பெண்களுக்கு கணவன் மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், பிற்பகலுக்கு மேல் ஒற்றுமை உண்டு.
 • வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.
 • அரசியல் மற்றும் அரசுத் துறைகளில் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் அழுத்தம் அதிகமாகும்.
 • குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
குறிப்பு: முருகப் பெருமான் வழிபாடு முற்றிலும் உங்கள் மனக் கவலையை தீர்க்கும்.

ரிஷபம்
 • ரிஷப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்.
 • உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும் சுபகாரிய பேச்சு வார்த்தை நன்மையில் முடியும்.
 • புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.
 • வெளிநாடு மற்றும் வெளியூர் பிரயாணங்கள் பற்றி திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
 • வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 • சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
 • உடல் நலம் சீராக இருந்துவரும். குழந்தைகள் மன மகிழ்ச்சி உண்டாகும்.
 • வங்கித்தொழில் உணவுத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும், வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.
 • வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு உத்தியோகத்தில் உயர்வும், ஊதிய உயர்வும் காண்பதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகும் இன்றைய நாள் ஆகும்.
மிதுனம்
 • மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சமமான நாளாக இருக்கும்.
 • வீண் அலைச்சல்களை தவிர்த்துக்கொள்வது நல்லது.
 • தாய்வழி சொந்தங்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும்.
 • புதிய பிரயாணங்களை பற்றி திட்டமிடுவீர்கள்.
 • சிறிதளவு பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக அவைகளை சமாளிப்பீர்கள். குழந்தைகளின் கல்வி மேம்படும்.
 • சிறு சிறு உடல் உபாதைகள் வந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
 • உணவு பொருள்கள் வயிற்றுக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்பதால் உணவில் கவனம் தேவை. உடல் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
 • சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்து வரும்.
 • வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
 • நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவுகள் உண்டு வீட்டில் உள்ள மூத்தவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது.
 • பெண்களுக்கு இன்றைய நாள் திடீரென உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதால் பேச்சில் நிதானம் தேவை.
 • கோபத்தை குறைத்து குணத்தை பெருக்கிக் கொள்ளுங்கள்.
குறிப்பு: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
கடகம்
 • கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாக இருக்கும்.
 • புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். திருமணம் மற்றும் சுப காரியங்களை பற்றிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.
 • புதிதாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
 • சொந்தத் தொழிலில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
 • பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
 • கணவன் மனைவி ஒற்றுமையும் அன்னியோன்யமும் அதிகமாகும்.
 • உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகை அல்லது சந்திப்பு உண்டு.
 • இவர்களால், ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
 • குழந்தைகளின் கல்வி மேம்படும்.
 • கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள்.
 • சொத்து வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது விற்பது தொடர்பான காரியங்களில் ஆதாயம் உண்டு.
 • நாட்டில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
 • எதிர்பார்த்த தனவரவு உண்டு.
 • காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வு உண்டு
 • விஷுவல் மீடியா மற்றும் கலைத் துறைகளில் இருப்பவர்களுக்கு உங்கள் முயற்சிக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.
 • புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நல்ல நாள் ஆகும்.
குறிப்பு: வெங்கடாஜலபதி வழிபாடு உங்கள் முயற்சிகளை மேலும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்
சிம்மம்
 • சிம்மம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் சொத்துக்கள் வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஆதாயம் பெறுவீர்கள்
 • புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் நல்ல நாள் ஆகும் திருமணம் மற்றும் சுப காரிய முயற்சிகளில் வெற்றியை கொடுப்பதாக அமையும்.
 • ஒருசிலர் புதிய இடமாற்றத்தை பற்றிய சிந்தனைகளில் அறிவீர்கள் அவைகளில் வெற்றி கிடைக்கும் குழந்தைகளின் கல்வி நன்றாக இருக்கும்.
 • கல்வியில் புதிய வாய்ப்புகளும் கல்லூரிகளில் சேர்க்கையும் கிடைக்கும் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் இருப்பவர்களுக்கு வெற்றிகளை சாதிக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.
 • பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
 • கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் உடல் நலம் நன்றாக இருந்து வரும் மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டாகும்.
 • அரசியல் துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு ஏற்றம் காணும் நாள் ஆகும்.
 • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
 • குடும்பத்தில் அமைதி நிலவும் புதிய குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
கன்னி
 • கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் உங்களுடைய முயற்சிகள் வெற்றியடையும்.
 • குடும்பத்துடன் அதிக நேரம் ஒதுக்க முடியாமல் பணிச்சுமை உங்களை அழுத்தும்.
 • உடல் நலம் சீராக இருந்துவரும்.
 • பங்கு வர்த்தகம் மருத்துவத்துறை தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இன்றைய நாள் அமையும். கல்வியில் உயர்வு உண்டு.
 • குழந்தைகளைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து செல்லும்.
 • எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடுதல் இன்று இருக்கும்.
 • பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
 • திருமண காரியங்களை பற்றிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.
 • எதிர்பார்த்த பணம் வருவது சற்று கால தாமதம் ஆகலாம்.
 • கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க கூடிய நாள் ஆகும்.
 • பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பல தகவல்கள் தங்களுடைய வியாபாரத்தைப் பெருக்கும் விதமாக அமையும்.
 • காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான மன மகிழ்ச்சியான சந்திப்புகளும் உண்டு
துலாம்
 • துலாம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
 • எதிர்பார்த்த பணம் வரும் போட்டி பந்தயம் லாபம் தரும்.
 • குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.
 • பெண்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.
 • நாளின் பிற்பகுதியில் சிறு சிறு பிணக்குகள் கணவன் மனைவியருக்கிடையே ஏற்பட்டாலும் மொத்தத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
 • குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் பிற்பகலுக்கு மேல் வரக்கூடிய காலங்களில் அனுசரித்துச் செல்வது நல்லது. ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்பட வழி உண்டு.
 • புது தொழில் முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடினமான பற்றிய ஏற்ற அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.
 • வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு தங்களுடைய பணிக்கு ஏற்ற அங்கீகாரமும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அடிப்படையான விஷயங்கள் இன்று நடந்து வரும்.
 • தாய் நாடுகளிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவீர்கள்.
 • குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்
 • விருச்சக ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும்.
 • கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும்.
 • எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும் பெண்களுக்கு இனிமையான நாளாகும்.
 • குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இன்றைய நாள் அமையும்.
 • உயர்விற்கான ஒரு சில காரியங்கள் நிறைவேறும்.
 • சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள்.
 • உடன் பிறந்தவர்கள் சற்று கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமையைக் கைக் கொள்வது நல்லது. சுபகாரிய மற்றும் திருமண முயற்சிகள் வெற்றியை நோக்கி இருக்கும்.
 • உடல் நலம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து தொடர்பான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
 • பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மருத்துவம் இன்ப்ராஸ்ட்ரக்சர் அல்லது உள்கட்டமைப்பு காப்பர் போன்ற இடங்களில் முதலீடுகளை தவிர்த்து கொள்வது நல்லது.

தனுசு

 • தனுசு ராசி நண்பர்களுக்கு இன்று முழுவதும் உங்கள் ராசிக்கு 12ல் சந்திரன் சஞ்சாரம் செய்வதால் அலைச்சல் அதிகமாக இருக்கும்.
 • வீண் அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளவும் குடும்பத்தில் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
 • பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
 • கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.
 • உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் உண்டு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெற்றிகரமான நாளாகும்.
 • வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும்.
 • அவைகளில் வெற்றியும் கிடைக்கும்.
 • எதிர்பார்த்த பணவரவு உண்டு. கூட்டுத் தொழிலில் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும், வெற்றிகளைக் காண்பீர்கள்.
 • கலைத்துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகளும், எண்ணங்களும் உதயமாகும். புதிய நண்பர்கள் சந்திப்பால் தொழிலில் முன்னேற்றம் உண்டு.
 • உடல் நலம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மகரம்

 • மகர ராசி நேயர்களுக்கு எதிர்பாராத தனவரவு உண்டு.
 • புதிய நண்பர்களின் சந்திப்பு அவர்களால் ஆதாயமும் இருக்கும்.
 • குழந்தைகளின் கல்வி சிறப்பாக இருக்கும்.
 • குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.
 • பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
 • குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும்.
 • கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும்.
 • உங்கள் பேச்சிற்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி மரியாதை கிடைக்கும்.
 • புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும்.
 • ஒருசிலருக்கு புதிய மாற்றத்தை பற்றி சிந்திப்பார்கள் வெளிநாடு மற்றும் வெளியூர் செல்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வெற்றியான நாள் ஆகும்.
 • குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.
 • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய சரியான பாராட்டுதல்கள் கிடைக்கும்.
 • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
 • தேவையான ஓய்வு கிடைக்கும்.
கும்பம்

 • கும்பராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் தொழிலில் வெற்றியை கொடுக்க கூடிய நாளாக இருக்கும்.
 • எதிர்பாராத தனவரவு உண்டாகும்.
 • சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும்.
 • உங்கள் பேச்சுக்கும் வாக்கு இருக்கும்.
 • சமுதாயத்திலும், குடும்பத்திலும், மகிழ்ச்சியும், அங்கீகாரமும் உண்டாகும்.
 • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
 • புதிய தொழில் முயற்சியில் பல புதிய வாய்ப்புகளை காண்பீர்கள்.
 • உயர்கல்வி கற்கும் நண்பர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
 • ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
 • வங்கித் துறை சேவைத் துறை உணவு தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு வெற்றியான நாள் ஆகும்.
 • நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டாகும்.
 • ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் மேலோங்கி நிற்கும்.
 • வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்வதற்கு முயற்சியை துவங்குவார்கள், அவர்களுக்கு வெற்றியும் உண்டு.
 • மாணவர்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். உடல் நலம் நன்றாக இருந்து வரும்.
மீனம்

 • மீன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாக இருக்கும்.
 • புதிய தொழில் வாய்ப்புகளும் உத்தியோக வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
 • நீண்டநாள் தடைபட்டு வந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
 • உங்களுடைய முயற்சிகள் வெற்றியை நோக்கிப் பயணிக்கும், நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு.
 • வங்கித் துறை சேவைத் துறை நீதித் துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் நாளாக இன்றைய நாள் இருக்கும்.
 • திருமண முயற்சிகள் வெற்றியடையும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்