இன்றைய ராசி பலன்: எந்த ராசிகாரர்களுக்கு ஓய்வு மற்றும் பல விவரங்கள்...

Report Print Abisha in ஜோதிடம்

ஓய்வு நாள் என்றாலும் 12ராசிகாரர்களுக்கு எப்படி இந்த நாள் அமையும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த ஓய்வு நாளாகும்.

  • கோவிலுக்குச் செல்லுதல் வீட்டில் உள்ள பெரியவர்கள் சந்தித்தல் குருமார்களை பார்த்தால் அவர்களுடைய ஆசீர்வாதப்பர் போன்றவை சிறப்பாக நடைபெறும்.
  • ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நியாயமாக இருக்கும்.
  • பற்றாக்குறையை சிறப்பாக சரி செய்வீர்கள்.
  • நீண்டநாள் எதிர்பார்த்திருந்த பொருளாதார வரவு உண்டு.
  • குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் உணர்ச்சிவசப்படாமல் வார்த்தையில் கடைபிடிப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய நாளாக இருக்கும்.

  • கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.
  • பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும்.
  • குடும்ப ஒற்றுமை பிற்பகலுக்கு மேல் நன்றாக இருக்கும்.
  • பற்றாக்குறையை சமாளிக்க சிரமப்படுவீர்கள் என்றாலும் வெற்றி கிடைக்கும்.
  • சொந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக அளவில் பற்றாக்குறையும், மன அழுத்தமும் உண்டாக வாய்ப்புண்டு என்பதால் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு நாளாகவே இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும்.

  • நீங்கள் எதிர்பார்க்கின்ற பல காரியங்களில் வெற்றியை தேடித்தரும்.
  • திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
  • உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும்.
  • பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும்.
  • கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிறப்பான நாள் ஆகும்.

  • உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.
  • சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். பு
  • திய தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும்.
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பை நோக்கி இருப்பவர்கள் பல புதிய வழிகளைக் காண்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் சுபமான ஒரு நாள் ஆகும்.

  • கோவிலுக்குச் செல்லுதல் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுதல் வயதில் மூத்தவர்களை சந்தித்தல் குருமார்களை சந்தித்தல் போன்ற காரியங்களில் அல்லது அது சம்பந்தப்பட்ட எண்ணங்களில் ஈடுபடுவீர்கள்.
  • சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றிக்கான கூடிய நல்ல நாள் ஆகும்.
  • உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மனமகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டாக வாய்ப்பு உள்ளது.
  • பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு வேலை சற்று காலதாமதமாகும்.
  • திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி பெற்றதாக இருக்கும்.

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும்.

  • கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல ஓடிக்கொண்டிருக்கும் ஓய்வு கிடைக்கும்.
  • மாணவர்களின் கல்வித் திறன் பளிச்சிடும்.
  • ஆராய்ச்சிகளில் இருப்பவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
  • ஒருத்தர் சொத்துக்கள் இருப்பது தொடர்பான விற்பது தொடர்பான காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும்.

  • நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்.
  • தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் ஆதாயம் கிடைக்கும்.
  • சொந்தத் தொழில் செய்பவர்கள் வெற்றியடைவார்கள்.
  • புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் வந்து நிற்கும்.
  • பெண்கள் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இனிய தகவல்கள் வந்து சேரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களுக்கு இந்த நாள் நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய நாள் ஆகும்.

  • சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும், நிர்வாகத்தில் நல்ல பெயரை பெறுவார்கள்.
  • குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் போகலாம்.
  • கணவன் மனைவி ஒற்றுமையில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், வெற்றிகரமாக சமாளித்து குடும்ப அமைதியை நிலை நாட்டுவார்கள்.
  • மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாள் ஆகும்.

  • பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும்.
  • ஒரு சிலர் கடனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
  • உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
  • கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும்.
  • குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மகரம்

மகர ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது புதிய வேலைக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றை சற்று தள்ளி வைத்தால் நல்லது.

  • குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் என்றாலும் வார்த்தைகளில் நிதானம் தேவை.
  • கோபத்தை குறைத்து குணத்தை அதிகப் படுத்திக் கொள்ளவும்.
  • வேலை மாற்றத்தை நோக்கி இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை ஏற்பட்டாலும் வெற்றி காண்பார்கள்.
  • திட்டமிட்டபடி குடும்பத்துடன் வெளியே சென்று வருவது தாமதமாகலாம் அல்லது தடையாகலாம்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு நல்ல நாள் ஆகும்.

  • கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றியடையும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொழில் வாய்ப்புகள் போன்றவற்றை முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புதிய வழிகள் தென்படும்.
  • காதல் வயப்பட்டிருப்பவர்கள் வெற்றியடைவார்கள்.
  • வீட்டில் உங்கள் காதல் சம்பந்தமாக பேசுவதற்கு உகந்த நாள்
  • பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
  • உடல் நிலை நன்றாக இருந்து வரும்.

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் இனிமையான நாள் ஆகும்.

  • உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
  • சிறப்பான ஓய்வு கிடைக்க கூடிய நல்ல நாள் ஆகும்.
  • குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டி வரும்.
  • கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.
  • குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers