ஆகஸ்ட் மாத ஜோதிடப் பலன்கள் : எந்த ராசிக்கு திடீர் யோகம் கிடைக்க போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

2019 ஆ‌ம் ஆ‌ண்டு ஆகஸ்ட் மாத‌த்‌தி‌ற்கான ஜோ‌திட‌ப் பல‌ன்களை பற்றி பார்போம்.

மேஷம்

ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றும் மேஷ ராசியினரே! நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பவர்.

இந்த காலகட்டத்தில் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு ராசிநாதன் செவ்வாய் மாற்றம் பெறுகிறார்.

இதனால் பல நன்மைகள் உண்டாகும். பாக்கியஸ்தானத்தில் உலவும் சனி கேதுவால் முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம்.

உத்தியோக ஸ்தானம் வலுப் பெறுவதால் உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.

குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்ப ஸ்தானத்தை குரு பார்த்து அருள் செய்கிறார். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள், எதிர்ப்புகள் தீரும்.

பெண்களுக்கு: கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும்.

கலைத்துறையினருக்கு: தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.

அரசியல் துறையினருக்கு: மற்றவர்களுக்கு உதவிகள் செய்யத் தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.

மாணவர்களுக்கு: எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி வர சொத்து பிரச்னை தீரும். குடும்ப குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி.

ரிஷபம்

எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்தும் ரிஷப ராசியினரே! உங்கள் மனம் சுத்தமாய் இருப்பதைப் போல் சுற்றமும் சுத்தமாய் இருக்க வேண்டும் என நினைப்பவர்.

இந்த காலகட்டத்தில் சப்தம ராசியில் இருக்கும் குரு பகவானின் அருட்பார்வை ராசியில் விழுகிறது. தைரிய ஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதன் சுக்கிரனால் வாழ்க்கைக்குத் தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பாக்கியஸ்தானத்தை ராசிநாதன் சுக்கிரன் பார்க்கிறார். புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்க தூண்டுவார். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.

உத்யோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும். சக ஊழியர்களுடைய ஆதரவு கிடைக்கும்.

குடும்ப ஸ்தானத்தை குடும்பாதிபதி புதனும் ராகுவும் அலங்கரிக்கிறார்கள். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

பெண்களுக்கு: ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும்.

கலைத்துறையினருக்கு: புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

அரசியல் துறையினருக்கு: சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும்.

மாணவர்களுக்கு: கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று பெருமாளுக்கு வெண் தாமரையால் அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.

மிதுனம்

தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படும் மிதுன ராசியினரே! நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்பவர். இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் ராசியில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். இதன் மூலம் எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும்.

தொழிற்ஸ்தானத்தை அதன் அதிபதியான குரு பார்க்கிறார். இந்த காலகட்டத்தில் செவ்வாயும் எட்டாம் பார்வையால் பார்க்கிறார்.

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - செவ்வாய் - சுக்கிரன் இருக்கிறார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.

பெண்களுக்கு: மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு: நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும்.

அரசியல்வாதிகளுக்கு: மக்கள் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

மாணவர்களுக்கு: கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கி வர வறுமை நீங்கும். கல்வியறிவு பெருகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.

கடகம்

மற்றவர்கள் மீது பரிவுகாட்டும் குணமுடைய கடக ராசியினரே! நீங்கள் திடீரென்று உணர்ச்சி வசப்படக் கூடியவர். இந்த காலகட்டத்தில் ராசியில் சூரியன் - செவ்வாய் - சுக்கிரன் ஆகியோர் இருக்கிறார்கள்.

ராசியை குரு பார்க்கிறார். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழிற்ஸ்தானாதிபதி செவ்வாய் ராசியிலேயே இருக்கிறார்.

தனாதிபதி சூரியனும் சுகாதிபதி சுக்கிரனும் ராசியிலேயே இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும்.

நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகள் தீரும். கணவன் - மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும்.

பெண்களுக்கு: அடுத்தவர்கள் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு: சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு: கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு: பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும்.

பரிகாரம்: துர்க்கையம்மனுக்கு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். காரியத் தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்.

சிம்மம்

தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சிம்மராசியினரே! குரு சுகஸ்தானத்தில் இருக்க - ராசிநாதன் சூரியன் விரயஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரனுடன் இணைந்து உலவ என அருமையான அமைப்பில் இருக்கிறீர்கள்.

நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். தொழிற்ஸ்தானத்தை குரு பார்ப்பது மிகப் பெரிய பலம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

மேலதிகாரிகளுடன் கவனமாகப் பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

பெண்களுக்கு: திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

கலைத்துறையினருக்கு: மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும்.

அரசியல்வாதிகளுக்கு: உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு: சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவபெருமானையும், நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். குழப்பம் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.

கன்னி

மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறும் கன்னி ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் புதன் லாபஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார்.

லாபஸ்தானத்தில் இருக்கும் செவ்வாய் விரயஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார். சுகஸ்தானத்தில் இருக்கும் சனியால் சில சங்கடங்கள் நேரலாம். அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம்.

தொழிற்ஸ்தானத்தை ராசிநாதன் புதன் அலங்கரித்தாலும் அந்த இடத்தை சனிபகவான் பார்க்கிறார்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கணவன் - மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும்.

கலைத்துறையினருக்கு : சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு! முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாகக் கையாள்வதன் மூலம் பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது.

மாணவர்களுக்கு: எந்த ஒரு பாடத்தைப் படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: பைரவரை புதன்கிழமை அன்று வணங்க திருமணத் தடை நீங்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.

துலாம்

அடுத்தவர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு ஆலோசனை கூறத் தயங்காத துலா ராசியினரே! எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது.

தொழிற்ஸ்தானத்தை தனஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் பார்க்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.

குடும்பஸ்தானத்தில் குரு பகவான் இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள்.

பெண்களுக்கு: தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு: இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு: மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

மாணவர்களுக்கு: கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்து வணங்குவது சுபிட்சத்தை தரும். இல்லறத்தில் இருந்த சச்சரவு தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.

விருச்சிகம்

எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபம் கொள்ளக் கூடிய விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுப்பீர்கள். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும்.

ஆனாலும் சுப செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும்.

ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். தொழிற்ஸ்தானாதிபதி சூரியன் பாக்கியஸ்தானத்தில். ராசிநாதன் செவ்வாய் - சுக்கிரன் இணைந்திருக்கிறார். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம்.

குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.

பெண்களுக்கு: தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு: கடுமையான உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும்.

நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகளுக்கு: வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

மாணவர்களுக்கு: பாடங்களை கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்:ஞாயிற்றுக் கிழமையில் மாரியம்மனுக்கு அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பமும் நீங்கும். மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி.

தனுசு

எப்போதும் உற்சாகமாக இருக்கும் தனுசு ராசியினரே! ராசியில் சனி கேது இருந்தாலும் ஏனைய கிரகங்களின் பாதசாரத்தின் சஞ்சாரத்தால் நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும்.

தொழிற்ஸ்தானாதிபதி புதன் ராசியைப் பார்க்கிறார். பாக்கியாதிபதி சூரியன் தனஸ்தானத்தை பார்க்கிறார். தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும்.

வக்ரம் பெற்ற ராசிநாதன் இந்த காலகட்டத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீரும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.

பெண்களுக்கு: இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு: மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும்.

அரசியல்வாதிகளுக்கு: இனிமையான செய்திகள் தேடி வரும். மாணவர்களுக்கு: சகமாணவர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அஷ்டகம் படித்து தட்சிணாமூர்த்தியை வணங்கி வருவதால் பணக்கஷ்டம் தீரும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்.

மகரம்

எந்த காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதை நிதானமாகச் செய்து வெற்றி பெறும் மகர ராசியினரே! நீங்கள் எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்புபவர்கள். சுக்கிரனின் சஞ்சாரத்தால் எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள்.

தொழிற்ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தாலும் அவர் உங்கள் ராசிக்கு பாதகாதிபதியாக இருப்பதால் தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள்.

குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும்.

பெண்களுக்கு: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.

கலைத்துறையினருக்கு: நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும்.

அரசியல்வாதிகளுக்கு: வெளியூர் செல்ல நேரிடும்.

மாணவர்களுக்கு: கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள்சாதம் வைப்பது உடல் ஆரோக்கியத்தை தரும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.

கும்பம்

எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் கும்ப ராசியினரே! நீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்புபவர்.

இந்த காலகட்டத்தில் ராசியை செவ்வாய் பார்க்கிறார். கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெறும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை.

எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம்.

தொழில் ஸ்தானத்தில் தனாதிபதி குரு இருக்கிறார். பஞ்சம அஷ்டமாதிபதி புதன் சாரம் பெற்றிருக்கிறார்.

தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பஸ்தானத்தை குரு பார்க்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும்.

பெண்களுக்கு: மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை.

கலைத்துறையினருக்கு: உடனிருப்பவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வாக்குவாதங்களைத் தவிர்த்து சாதுர்யமாக கையாள்வது நல்லது. வரவேண்டிய பணம் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு: நீண்ட நாட்களாக வரவேண்டி இருந்த பணம் வந்து சேரும். உங்கள் பணிகளில் பல குறுக்கீடுகள் வந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

மாணவர்களுக்கு: மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

பரிகாரம்: விநாயகப் பெருமானை அறுகம் புல்லால் அர்ச்சனை செய்து வணங்குவதால் காரிய அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி.

மீனம்

எந்த காரியத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று தெளிவாக சிந்தித்து சரியான முடிவு எடுக்கத் தெரிந்த மீன ராசியினரே! பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம். கவனம் தேவை.

அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழிற்ஸ்தானத்தில் சனி கேது இருக்கிறார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும்.

வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாகப் பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது.

வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.

பெண்களுக்கு: எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல்நேரம் உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு: மகிழ்ச்சியான காலகட்டம். பணவரவு இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு: லாபமான காலமாக அமையும். பண வரவு திருப்தி தரும்.

மாணவர்களுக்கு: மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நன்மைதரும்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்னை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்