இந்த வார ராசி பலன் (ஆகஸ்ட் 06 முதல் ஆகஸ்ட் 11 வரை ) : மகிழ்ச்சியின் உச்சத்தை தொடப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

Report Print Kavitha in ஜோதிடம்

ஆகஸ்ட் 06 முதல் ஆகஸ்ட் 11 வரை இந்த வார ராசிப்பலனில் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி என்பதை பார்ப்போம்.

மேஷம்

பணவரவுக்கு குறைவில்லை. தேவையற்ற செலவுகளும் இருக்காது. திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை

இதுவரை இருந்த பணி நெருக்கடி இப்போது சற்று குறையும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வேலைக்கு முயற்சி செய்வர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.

எதிர்பார்த்தப்படியே நடக்கும். கடையே வேறு இடத்துக்கு மாற்ற நினைத்தால் அதற்கான முயற்சிகளிவல் ஈடுபடலாம். பணியார்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை உடனுக்குடன் புரிந்து கொள்வதால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்சியான வாரம். மற்றவர்களுடன் இணக்கமான சூழ்நிலை நிலவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 5, 6, 7, 8

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4

சந்திராஷ்டம நாள்கள்: 9, 10

வழிபடவேண்டிய தெய்வம்: சூரியன்

ரிஷபம்

பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருப்பதாலும், தேவையற்ற செலவுகள் இல்லை என்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்தாலும் உடனே நிவாரணம் கிடைக்கும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.

வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நிர்வாகத்தினர் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவிகரமாக இருப்பார்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு புது வாய்ப்புகள் கிடைக்காததுடன், கிடைத்த வாய்ப்பு களையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளமுடியாத சூழ்நிலை ஏற்படும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பழைய நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்பதால் பிரச்னை இருக்காது. அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகளும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 7, 8, 9, 10

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 6

சந்திராஷ்டம நாள்: 11

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

மிதுனம்

வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அவசிய செலவுகளாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். வார முற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். தந்தைவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். மற்றபடி பதவி உயர்வோ சலுகை உயர்வோ எதிர்பார்க்கமுடியாது. அதிகாரிகள் கடுமையாகப் பேசினாலும் பொறுமையுடன் எதிர்கொள்வது நல்லது.

வியாபாரத்தில் விற்பனை இருந்தாலும்கூட அதற்கேற்ற லாபம் கிடைக்காது. எனவே பொறு மையை விடாமல் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே வாய்ப்புகளைப் பெற முடியும். வருமானம்கூட ஓரளவுக்குத்தான் இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். அதேசமயம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு போதிய அளவு பண வசதி கிடைப்பதால் மன நிறைவு உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் தங்கள் பணிகளில் எச்சரிக் கையாக இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 9, 10, 11

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,5

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

கடகம்

பொருளாதார வசதி சுமாராகத்தான் இருக்கும். செலவுகளும் குறைவாகவே இருக்கும். உறவினர்களுடன் வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரும். தந்தையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும். பிள்ளைகளால் உறவினர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும்.

அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்த சலுகை இப்போது கிடைக்கும். சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

வியாபாரத்தில் விற்பனை நல்லபடியாக இருப்பதுடன், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்களும் நல்லபடி ஒத்துழைப்பார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன் வருமானமும் கூடுதலாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.

மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். சக நண்பர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை தேவை.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் சிறிது சிரமங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்: 5, 6, 11

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

சிம்மம்

பண வரவுக்கு குறைவிருக்காது. குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சகோதர வகையில் இருந்து வந்த சச்சரவுகள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்தால், சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசாங்க வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது.

அலுவலகத்தில் உங்களுக்கு மறுக்கப்பட்டு வந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு வேறு ஊருக்கு இட மாறுதல் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் விற்பனை சற்று மந்தமாகத்தான் இருக்கும். சக வியாபாரிகளுடன் இணக்க மாக நடந்துகொள்வது அவசியம். முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடு களைத் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள். மாதாந்திர தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 7, 8

அதிர்ஷ்ட எண்கள்: 4,5,6

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்

கன்னி

எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வராது என்று நினைத்த கடன் வந்து சேரும். உடல் நலன் சிறிய அளவில் பாதிக்கப்படும். திருமண முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னர் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு திடீர்ப் பயணங்கள் மேற்கொள்ளவும், அதனால் வீண் செலவுகளும், உடல் அசதியும் ஏற்படக்கூடும். பிள்ளைகளை அனுசரித்துச் செல்லவும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் அனுசரணை யாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். கடையை விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. சக கலைஞர்களால் அனுகூலம் உண்டாகும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு உற்சாகம் தரும் சம்பவங்கள் நடை பெறும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்ட நாள்: 5, 6, 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,7

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்

துலாம்

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தடைப்பட்டு வந்த சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழ்நிலை கனிந்து வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. நீண்ட காலமாகச் செலுத்தமுடியாமல் போன குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் தங்கள் பணிகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகே கிடைக்கும்.

வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைப்பது இழுபறியாகும்.

கலைத்துறையினருக்குத் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றபடி வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். சக கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் குறைவதற்கான சாத்தியம் உள்ளது. சக நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 7, 8, 11

அதிர்ஷ்டம் தரும் எண்கள்:6,9

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்

விருச்சிகம்

பணவரவு ஓரளவு திருப்தி தரும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உறவு பாராட்டுவார்கள். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக் கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. இரவு நேரத்தில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் ஏற்படக் கூடும். அதிகாரிகளிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பற்று வரவில் பிரச்னை எதுவும் இருக்காது. சரக்கு கொள்முதலுக்காக தொலைதூர பயணங்கள் செல்ல நேரிடும்.

கலைத்துறையினருக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

மாணவர்களுக்கு அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும். படிப்பில் கவனம் செலுத்த முடியாது. போட்டிகளில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: 5, 6, 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

தனுசு

தேவையான அளவுக்குப் பணவரவு இருந்தாலும், சேமிக்க முடியாத படி செலவுகள் ஏற்படும். சிலருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மற்றவர்கள் உங்களைப் பற்றி அவ தூறாகப் பேசினாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வெளி மாநிலங்களில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும்.

அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். அதிகாரிகள் கடுமை காட்டினாலும் பொறுமை அவசியம்.

வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். சக வியாபாரிகளுடன் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவும்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். மூத்த கலைஞர்களின் அறிவுரை மனதுக்கு ஆறுதல் தரும்.

மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பதற்குத் தேவையான உதவிகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் அதிகரிப்பதால் சிரமம் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பணிகளில் மிகுந்த கவனம் தேவை.

அதிர்ஷ்ட நாள்கள்: 5, 6, 7, 11

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை

மகரம்

பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் சிறிது கடன் வாங்கவும் நேரிடும். கணவன் - மனைவிக் கிடையே ஏற்பட்டிருந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இளைய சகோதரர்களால் உதவி உண்டு. வழக்குகளில் பொறுமையான அணுகுமுறை தேவைப்படும். தந்தைவழி உறவினர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணி நிரந்தரம் உண்டாகும். அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதால் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கச் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கேற்ற லாபம் கிடைப்பதால் உற்சாகம் உண்டாகும். சக வியாபாரிகள் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை உடனுக்குடன் புரிந்துகொள்வீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சிரமம் எதுவும் ஏற்படுவதற்கில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம்.

அதிர்ஷ்ட நாள்: 7, 8, 9, 10

அதிர்ஷ்ட எண்கள்: 7, 9

வழிபடவேண்டிய தெய்வம்: வள்ளி தேவசேனா சமேத முருகக்கடவுள்

கும்பம்

வருமானம் திருப்தி தருவதாக இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வழக்குகளில் இருந்து வந்த பிற்போக்கான நிலை மாறி, சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பற்று வரவு சுமுகமாக நடை பெறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பணியாளர்கள் விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால், வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்காது.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:9, 10, 11

அதிர்ஷ்ட எண்கள்: 2,5

சந்திராஷ்டம நாள்கள்: 5, 6

வழிபடவேண்டிய தெய்வம்: பெருமாள்

மீனம்

பண வரவுக்குக் குறைவில்லை. அதேசமயம் சில தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். அவசியத் தேவை என்றாலும்கூட இப்போது கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருவதாக இருக்கும். தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பேசும்போது பொறுமை அவசியம். சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை. பங்குதாரர்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர் பார்க்க முடியாது.

கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகளும் அதனால் தாராளமான பணவரவும் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்களுடன் இணக்கமாகப் பழகுவார்கள்.

மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதல் ஆர்வம் உண்டாகும். பாடங்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகளால் சற்று சிரமப்படவேண்டி இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 5, 6, 11

அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1, 7

சந்திராஷ்டம நாள்கள்: ஆகஸ்ட் 7, 8

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்