மிகப்பெரிய ராஜயோகத்தை வழங்க போகும் குரு... எந்த லக்னகாரர்களுக்கு அந்த பேரதிர்ஷ்டம் கிடைக்க போகுது?

Report Print Kavitha in ஜோதிடம்

இந்த ஆண்டு வருகின்ற அதிசார குரு பெயர்ச்சியால் குரு பலம், குரு பார்வை, குரு யோகம் உங்களுக்கு எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.

அதுமட்டுமின்றி எந்த லக்னகாரர்களுக்கு குரு தசை காலத்தில் யோகம் செய்வார் யாருக்கு பாதகம் செய்வார் என பார்க்கலாம்.

மேஷம் விருச்சிகம்

குரு சில லக்னகாரர்களுக்கு யோகத்தை தருவார். மேஷ லக்னகாரர்களுக்கு குரு பாக்யாதிபதி, விரைய ஸ்தானதிபதி.

மேஷம் ராசி, லக்னகாரர்களுக்கு குரு தசை நன்மை செய்யும். பொருளாதார உயர்வை தருவார். காரணம் அவர் யோகாதிபதி.

குரு தசை காலத்தில் பதவி உயர்வை தருவார். செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட விருச்சிக லக்னங்களுக்கு குரு இரண்டு மற்றும் ஐந்துக்குடையவராகி யோக நிலை பெற்று தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். நல்லதே செய்வார்.

ரிஷபம் துலாம்

ரிஷபம் துலாம் லக்னத்திற்கு அதிபதி சுக்கிரன். இவருக்கும் குருவிற்கு ஆகாவே ஆகாது. காரணம் சுக்கிரன் அசுர குரு, குரு தேவ குரு. ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை.

அவர், துலாம் லக்னத்துக்கு 6ஆம் வீட்டிலும், ரிஷப லக்னத்துக்கு 8ஆம் வீட்டில் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுபகிரகங்களின் தொடர்பு ஏற்பட்டால் விபரீத ராஜயோகத்தை தருவார். வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகத்தை வழங்கி செல்வம் செழிக்கச் செய்வார்.

அதே போல துலாம் லக்னத்துக்கு 11ஆம் இடத்தில் குரு இருப்பது நல்லது. லாபத்தையும் வருமானத்தையும் தருவார்.

மிதுனம் கன்னி

மிதுனம் லக்னகாரர்களுக்கு குரு கேந்திராதிபதி தோஷம் செய்வார். மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கும் குரு கேந்திராதிபதி தோஷத்தை ஏற்படுத்துவார். 7 , 4 மற்றும் 10 ஆம் வீட்டில் குரு பகவான் அமரும்போது யோகம் தருவார்.

அதிலும் குறிப்பாக, 7 ஆம் வீட்டில் சுப கிரகங்களின் சேர்க்கை பார்வையில் அமரும் போது நல்ல வாழ்க்கைத்துணை, புகழ் சேர்க்கும் பிள்ளைகளை அமைத்துத் தருவார்.

கடகம் சிம்மம்

சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட கடகத்தில் குரு உச்சமடைகிறார். கடக லக்னகாரர்களுக்கு குரு ருண ரோக சத்ரு ஸ்தானாதிபதி, அதே போல பாக்யாதிபதி. கடகத்திற்கு யோகங்களையும் நிறைய அதிர்ஷ்டத்தையும் அள்ளித்தருவார் குரு.

சிம்ம லக்னத்துக்குப் பூர்வ புண்ணியஸ்தானாதிபதியாக அமைந்து யோகம் தருவார் குரு. சிம்மம் குரு லக்னத்தில் நின்றால் அரசாளும் யோகம்.

ஐந்தில் குரு நின்றால் புண்ணியம். அந்த புண்ணியங்கள் பலனாக உங்களுக்குக் கிடைக்கும். குரு தான் நின்ற இடத்தில் இருந்து ஐந்து ஒன்பதாம் இடங்களைப் பார்த்தால் அம்சமான குழந்தைகள் பிறக்கும். பேரும் புகழும் கிடைக்கும்.

மகரம் கும்பம்

மகரம், கும்ப லக்னத்துக்கு குரு யோகாதிபதியாக இல்லாவிட்டாலும், மகர லக்னத்துக்கு 7ஆம் வீட்டில் அமர்ந்து குரு லக்னத்தைப் பார்க்கும்போது, குரு தசையில் ஏராளமான நன்மைகளைச் செய்து ஜாதகரைப் புகழடையச் செய்வார்.

கும்ப லக்னக்காரர்களுக்கு 11ஆம் வீடான தனுசில் குரு பகவான் அமரும் போது தொழிலில் புகழடையச் செய்து பல வகையிலும் லாபம் ஈட்டித் தருவார். தனுசு ராசிக்கு வரப்போகும் லாப குரு பல நன்மைகளை செய்யப்போகிறார்.

தனுசு மீனம்

தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். அதே நேரத்தில் தனுசு லக்ன காரர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றால் நன்மை, அது எட்டாவது வீடான மறைவு ஸ்தானமாகவே இருந்தாலும் நல்லது நடக்கும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்றாலும் அதிகம் நன்மை இல்லை அதே நேரம் விருச்சிகமான ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மீனத்தை பார்ப்பதன் மூலம் வலிமை கிடைக்கும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்