மனைவியுடன் அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்த இளைஞர் பரிதாப மரணம்! கைதாகியவரின் பின்னணி

Report Print Shalini in அவுஸ்திரேலியா
1575Shares
1575Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்த இளைஞன் விபத்தில் உயரிழந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ள வாகன சாரதி குறித்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் நீர்கொழும்பு ஆயர் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் சிறைச்சாலை பஸ் மோதியதில் குருகுலசூரிய ரொஷான் பெர்னாண்டோ (28) என்ற இளைஞன் உயிரிழந்திருந்தார்.

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்து ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் முடித்த இவர், மனைவியுடன் அவுஸ்திரேலியா செல்ல காத்திருந்த நிலையில் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை பஸ் சாரதியான சமந்த திலக் குமார கைது செய்யப்பட்டிருந்தார். இவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,

குறித்த நபரின் கனரக வாகனங்களை செலுத்துவதற்கான அவரது சாரதி அனுமதிப்பத்திரம் கடந்த 2015ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளது.

இந்த நிலையில், சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்காமல் சுமார் இரண்டு வருடங்களாக வாகனங்களை செலுத்தி வந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று மஹரவிலிருந்து சிறைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு நீர்கொழும்பு நோக்கி சிறைச்சாலை பஸ் வண்டியை செலுத்தி வந்துள்ளார்.

இதன்போது, இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் குறித்த சிறைச்சாலை பஸ்ஸூடன் மோதியுள்ளது.

மேலும், விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்த சி.சி.டி.வி கமராவை பரிசோதித்த போது, விபத்து இடம்பெற்றதாக கூறப்படும் சில நிமிடங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீர்கொழும்பு தலைமை பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் தலைமையில் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுனில் ரணசிங்க, போக்குவரத்துப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஜீ.எம்.கே.யூ.கஜநாயக்க உள்ளிட்ட நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்