ஆஸ்திரேலியாவினுள் நுழைய அனுமதி மறுப்பு - தவிப்பில் அகதிகள்

Report Print Gokulan Gokulan in அவுஸ்திரேலியா

குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்கள் ஆஸ்திரேலியாவின் மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் மூலம் மீண்டும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆப்கானிஸ்தான், பூட்டான், கொங்கோ ஜனநாயக குடியரசு, எரித்திரியா, எத்தியோப்பியா, ஈராக், மியன்மார் மற்றும் சிரியா ஆகியவை இதில் அனுமதிக்கப்படும்.

ஆனால் ஈரான், தெற்கு சூடான் மற்றும் சோமாலியாவிலிருந்து வந்தவர்கள், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியாது.

இது பற்றி ஆஸ்திரேலியாவின் அகதி மன்றத்தில் இருந்து சாமுவேல் தாரியோல் கூறியதாவது

இந்த சமூக ஆதரவு திட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நாடுகள் அதிகார பூர்வமற்ற பட்டியலில் இருந்து வந்தவை

இது முன்னுரிமை பற்றிய விஷயம் என்று கூறும் தாரியோல் ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்கு பட்டியலிடப்படாத நாடுகளில் இருந்து வருபவர்களை அனுமதிப்பு என்பது எப்படிப் பார்த்தாலும் சாத்தியப்படாத விஷயம் என்று கூறினார்.

இது குறித்து உள்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் இந்த திட்டம் இனம், நாடு என்று எந்தவொரு பாகுபாடைக் கொண்டும் செயல்படுத்தப் படவில்லை என்றார்.

"இது உலகின் மிகவும் விலையுயர்ந்த திட்டம் எனும் தாரியோல் அதனால்தான் அகதிகளை அனுமதிப்பதில் கவனமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஒரு தனி அகதிக்கு நிதியுதவி $ 48,000 வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது மேலும் விசா மற்றும் மீள் குடியேற்ற கட்டணமானது ஒரு வருடத்திற்கு இரண்டு பெரியவர்களுக்கும் ஒரு குடும்பத்துக்கும் மூன்று சார்புடைய குழந்தைகளுக்குக்கும் $ 100,000 வரை செலவிடப்படுகிறது

என்பதால் நுழைவுத் தேர்வும் மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும், நிரல் தேவை அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய அகதிக்கு வயது 18-50 இருக்க வேண்டும், அவர்கள் ஆங்கிலம் பேச வேண்டும் என்று மீள்குடியேற்றத்தின் அளவுகோல்களை மேலும் கடினமாக்க வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக இந்த வருடம் உள்துறை விவகார அமைச்சர் பீட்டர் டட்டன் "ஆப்பிரிக்க கும்பல் வன்முறை" காரணமாக விக்டோரியர்கள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேற மிகவும் பயந்தனர் என்று கூறி இருந்தார்.

ஆஸ்திரேலிய குடிமக்கள் இல்லாத மக்களை வெளியேற்றுவது, தவறான செயலை செய்தவர்களை வெளியேற்றியது உட்பட சில செயல்கள் அரசாங்கத்தின் தேவை என்று அவர் கூறினார்

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers