அவுஸ்திரேலியாவில் கத்திக்குத்து தாக்குதல்: மர்ம நபரை சுட்டு வீழ்த்திய பொலிஸ்! அதிர்ச்சி வீடியோ

Report Print Vijay Amburore in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள வீதி ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதில் ஒருவர், கழுத்தில் பலத்த காயத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

இரண்டாவது நபருக்கு தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூன்றாவது நபர் காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இருவரின் நிலை பற்றி பொலிஸார் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

இதில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, அவர்களின் மீதும் கத்தியால் குத்த முயன்றதால் துப்பாக்கியால் சுட்டு தரையில் வீழ்த்தினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கைது செய்யப்பட்டு குற்றவாளியும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் பொலிஸார் அப்பறப்படுத்தி வருகின்றனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers