அவுஸ்திரேலிய கர்ப்பிணி பெண் படுகொலையில் அவிழும் மர்மங்கள்: கணவரை நாடு கடத்த கோரிக்கை

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சில மர்மங்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப்பிலுள்ள Bagge Ke Pipal என்ற பகுதியில் தனது கணவருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த கர்ப்பிணிபெண் ரன்வித் கவுர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கிரண் என்ற பெண் முக்கிய குற்றவாளி என கருதப்படுகிறார்.

சம்பவம் நடைபெற்ற அன்று ரன்வித்தை திட்டமிட்டு கடத்தி சென்று கழுத்தை நெரித்து படுகொலை செய்துள்ளார் கிரண். தற்போது கிரண் அவுஸ்திரேலியாவில் இருக்கும் காரணத்தால், கிரண் மற்றும் ரன்வித்தின் கணவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என பஞ்சாப் பொலிசார் தூதரகம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏனெனில், ரன்வித்தின் கணவர் உத்தரவின்பேரில் இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது. கிரணை தவிர்த்து இந்த சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்ட பஞ்சாப்பை சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், படுகொலை செய்யப்பட்ட ரன்வித்தின் உடலை கிரணின் சகோதரி அருகில் உள்ள ஆற்றில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

ரன்வித் கவுரின் பெற்றோர் கூறியதாவது, எங்களது மகள் இறந்துபோனவுடன் அவுஸ்திரேலியாவில் இருக்கும் கணவர் Jaspreet Singh- க்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் தனது மனைவியின் உடலை பார்ப்பதற்கு அவர் வரமறுத்துவிட்டார்.

எங்களது மகளின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறியுள்ளளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்